ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!

|

மனிதர்களை ஆச்சரியத்திலும் வியப்பிலும் உள்ளாக்கும் விலங்குகளின் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வியக்கவைக்கும் வீடியோக்கள்

வியக்கவைக்கும் வீடியோக்கள்

குரங்குகளின் சேட்டைகளில் சில நம்மை வியக்கவைக்கும் விதமாகவே இருக்கும். குரங்கு மட்டுமல்ல பொதுவாக ஒரு சில விலங்கினங்களே நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு நெகிழ வைக்கும்.

விலங்குகளும், பறவைகளும் செய்யும் வித்தியாசமான செயல்கள்

விலங்குகளும், பறவைகளும் செய்யும் வித்தியாசமான செயல்கள்

பல்வேறு நாடுகளில் இருந்து விலங்குகளும், பறவைகளும் செய்யும் வித்தியாசமான செயல்கள் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வைரலாகும். அதன்படி தற்போது நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

புகை உடல்நலத்திற்கு தீங்கு விளைக்கும்

புகை உடல்நலத்திற்கு தீங்கு விளைக்கும்

புகை உடல்நலத்திற்கு தீங்கு விளைக்கும், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு., இந்த வசனம் திரைப்படத்தில் தொடங்கி பல இடங்களில் வாசித்திருப்போம். மனிதர்கள் பிடிக்கும் புகை அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட சுற்றத்தார்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம்.

சிகரெட் பிடிக்கும் நண்டு

சிகரெட் பிடிக்கும் நண்டு

மனிதர்கள் பிடித்துப்போட்ட சிகரெட் துண்டை கீழே கிடந்து எடுத்த நண்டு அதை தனது கொடுக்கின் மூலம் இருவிரல்களில் பிடிப்பதுபோல் வாயில் வைத்து புகையை இழுக்கிறது. இந்த வீடியோவை சுஷாந்த் நந்தா என்பவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!என்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!

புகையை உள்ளே இழுக்கும் நண்டு

புகையை உள்ளே இழுக்கும் நண்டு

சுஷாந்த் நந்தா இந்தியா வனத்துறை அதிகாரி என கூறப்படுகிறது. இவர் அந்த வீடியோவில் நண்டு சிகரெட்டை தனது வாயில் வைத்து புகைக்கிறது. கொடுக்கின் மூலம் இரு விரல்களை வைத்து பிடிப்பதுபோல் சிகரெட்டை பிடித்து புகைக்கிறது. வீடியோ எடுக்கும்போது ஃப்ளாஷ் லைட் நண்டுமேல் படுகிறது அதை உணர்ந்த அந்த நண்டு சிகரெட்டை கீழே போடாமல் அந்த இடத்தில் இருந்து நகர்கிறது.

கெட்ட கனவுபோல் உள்ளது

இந்த வீடியோவில் தனது கருத்து குறித்து பதிவிட்ட சுஷாந்த் நந்தா, நண்டு சிகிரெட் பிடிக்கிறது. இது கெட்ட கனவுபோல் உள்ளது. மனிதர்கள் தூக்கி எரிந்தத் துண்டை நண்டு பயன்படுத்துகிறது. நமது செயல் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்பையும் கெடுத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

வருத்தம் தெரிவிக்கும் கருத்துகள்

வருத்தம் தெரிவிக்கும் கருத்துகள்

இந்த வீடியோவை இதுவரை சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பலரும் வேதனையுடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மனிதர்களால் விலங்குகளும் இந்த பழக்கத்தை தொடங்கிவிட்டது எனவும் இது அழிவுக்கான பாதை எனவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

செல்பி எடுத்த குரங்கு

செல்பி எடுத்த குரங்கு

அதேபோல் சமீபத்திய சில நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்று மலேசியாவில் உள்ள வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்று செல்பி எடுத்தது. பின் அந்த செல்போனை காட்டுப்பகுதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டது. தொடர்ந்து தற்போது நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Crab Smokes Cigratte: Cancer Taking a Cancerous Puff- Video Viral in Social Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X