கோவின் இணையதளத்தில் இனி அந்த சிக்கல் இல்லை- எளிய மக்களும் தடுப்பூசி புக் செய்யலாம்!

|

கோவின் இணையதளத்தில் அடுத்த இரண்டு தினங்களில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தப்படி தற்போது கோவின் தளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கு பயன்படும் தளமாக கோவின் இணையதளம் செயல்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில்., ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என கூறினார்.

கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யும் இணையதளம்

கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யும் இணையதளம்

கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யும் இணையதளமான கோவின் இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்தது. இருப்பினும் அடுத்ததாக கூடுதல் மொழிகள் இணைக்கப்பட்டது இதில் தமிழ் மொழி இல்லாமல் இருந்தது. இதையடுத்து தமிழ் மொழியையும் இணைக்கும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

கோவின் இணையதளத்தில் படிப்படியாக முன்னேற்றம்

கோவின் இணையதளத்தில் படிப்படியாக முன்னேற்றம்

இதுகுறித்து மத்திய அரசு அளித்த பதில் குறித்து பார்க்கையில், கோவின் இணையதளத்தில் படிப்படியாக முன்னேற்றம் செய்து பல மாநில மொழிகள் இணைக்கப்பட்டு பயன்பாடுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு தினங்களில் தமிழ் மொழி இணைக்கும் வசதி செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.

படிப்படியாக இணைக்கப்படும் மொழிகள்

படிப்படியாக இணைக்கப்படும் மொழிகள்

கோவின் இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது. அடுத்தடுத்த முன்னேற்றங்களாக மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாம், பெங்காலி, கன்னடா உள்ளிட்ட 9 மொழிகள் இணைக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு கூறிய வாக்குறுதி படி தற்போது தமிழ் மொழி கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மொழி தேர்வு செய்யப்படும் முறை

மொழி தேர்வு செய்யப்படும் முறை

கோவின் இணையதளத்தில் முகப்பில் மேற்புற இடதுபக்கத்தில் A என்ற எழுத்துடன் தேர்வு காண்பிக்கப்படும். தற்போதுவரை இதை கிளிக் செய்யும்போது ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே காண்பிக்கப்படும். ரிஜிஸ்டர் மற்றும் லாக்-இன் என்ற தேர்வை கிளிக் செய்தவுடன் இடதுபுற மேற்புறத்தில் அதே A என்ற தேர்வை கிளிக் செய்யும் போது கூடுதல் மொழிகள் காண்பிக்கப்படுகிறது.

கோவின் பயன்பாட்டை பதிவு செய்வது எப்படி

கோவின் பயன்பாட்டை பதிவு செய்வது எப்படி

  • கோவின் பயன்பாட்டின் மூலம் கோவிட்-19 தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
  • கோவின் இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும் அல்லது Co-WIN Vaccinator APP செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். கோவின் இணையதளத்தின் மூலமாகவே புக்கிங் அணுகலாம். செயலி அந்தளவு கூகுள் ப்ளே ஸ்டோரில் மதிப்பெண் பெறவில்லை.
  • கொரோனா இணையதளத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தடுப்பூசிக்கான தேதியை தேர்ந்தெடுக்ககலாம். அதன்பின் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
  • இவை அனைத்தும் முடிந்ததும் தடுப்பூசி எடுப்பதற்கான தேதி மற்றும் நேரம் காண்பிக்கப்படும்.
  • அனைத்து கேள்விகளையும் பூர்த்தி செய்தபிறகு இறுதி ஒப்புதல் தொகுதி பயனாளிகளுக்கு ஒரு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும். அதேபோல் ஒருவர் தடுப்பூசி போட்டப்பிறகு க்யூஆர் அடிப்படையிலான சான்றிதழ்கள் உருவாக்கப்படுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
CoWIN Vaccine: Now, People Can Booking Vaccination in Tamil Language

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X