CoWIN செயலி மூலம் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?- பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு!
கோவிட்-19 பரவலைத்தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

ஊசி செலுத்துவதற்கான ஒத்திகை நடவடிக்கை
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து பரவத்தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. புதிதாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

COVID-19 2020 தடுப்பூசி
COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்திய சுகாதார அமைச்சகம் கோவின் (coWIN App) டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவின் பயன்பாடு தளம் தடுப்பூசியை சுயமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு
புதிய கோவின் இயங்கதளமானது கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தை நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதிக்கிறது. மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் அதை பொதுமக்களுக்கு செலுத்தவும் இந்த இயங்குதளம் பயன்படுகிறது. இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

கோவின் செயலி ஐந்து தொகுதி
ஒருவர் தடுப்பூசி பெற விரும்பினால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். கோவின் இயங்குதளத்தில் ஐந்து தொகுதிகள் உள்ளன. அது நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளர்களின் ஒப்புதல் மற்றும் அறிக்கை தொகுதி ஆகியவை ஆகும்.

கோவின் பயன்பாட்டை பதிவு செய்வது எப்படி
கோவின் பயன்பாட்டின் மூலம் கோவிட்-19 தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
கோவின் செயலி கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தற்போதுவரை இணைப்பு இன்னும் நேரலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தடுப்பூசிக்கான தேதியை தேர்ந்தெடுக்ககலாம். அதன்பின் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
இவை அனைத்தும் முடிந்ததும் தடுப்பூசி எடுப்பதற்கான தேதி மற்றும் நேரம் காண்பிக்கப்படும்.

இறுதி ஒப்புதல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்
அனைத்து கேள்விகளையும் பூர்த்தி செய்தபிறகு இறுதி ஒப்புதல் தொகுதி பயனாளிகளுக்கு ஒரு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும். அதேபோல் ஒருவர் தடுப்பூசி போட்டப்பிறகு க்யூஆர் அடிப்படையிலான சான்றிதழ்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒத்திகை மட்டுமே நடைபெற்று வருகிறது
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை மட்டுமே தற்போது நாடு முழுவதும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா செயலி சரியாக செயல்படுகிறதா தடுப்பூசி வந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அறிவதற்காக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊசி எதுவும் செலுத்தப்படவில்லை
தற்போது ஊசி எதுவும் செலுத்தப்படவில்லை மாறாக கோவின் செயலிமூலம் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பொது சுகாதார மையம், அரசுமருத்துவமனைகளில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications