"ஒருவேலை நமக்கு கொரோனா இருக்குமோ" மொபைல் இருக்கா?- jio, airtel புதிய சேவை- இத பண்ணுங்க!

|

கொரோனா அச்சத்தை தங்களின் பயனர்களுக்கு போக்குவதற்கு ஜியோ, ஏர்டெல் கேள்விகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா?கொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா?

21 நாட்களுக்கு ஊரடங்கு

21 நாட்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர்

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் ஆகியோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பயம் இருக்கிறதா

கொரோனா பயம் இருக்கிறதா

இந்த நிலையில் லேசாக இருமல், காய்ச்சல் இருந்தாலோ தங்களுக்கு கொரோனா பயம் இருக்குமோ என்ற பயம் அனைவரிடமும் நிலவி வருகிறது. இதை போக்குவதற்கு ஜியோ ஒரு புதிய சேவையை அறிவித்துள்ளது. இது ஒரு முன்மாதிரியான சோதனை தான். இருப்பினும் மருத்துவமனையை அனுகுவதே சிறந்த முடிவு.

பல்வேறு விவரங்களின் அடிப்படையில் விவரங்கள்

பல்வேறு விவரங்களின் அடிப்படையில் விவரங்கள்

கொரோனா பாதிக்கும் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு உடல் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை முன்மாதிரியாக கண்டறியலாம்.

உடல் ஆரோக்கியம், பயண வரலாறு

உடல் ஆரோக்கியம், பயண வரலாறு

இந்த சேவையில் பயனாளர்கள் கொடுக்கும் உடல் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விவரங்களை வைத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா எனத் தெரிவிக்கப்படும். இந்த சேவையானது மைஜியோ செயலியில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

குறைவு, சராசரி மற்றும் அதிகம் என்ற அடிப்படையில்

குறைவு, சராசரி மற்றும் அதிகம் என்ற அடிப்படையில்

ரிலையன்ஸ் ஜியோ டூல் பயனாளரின் வயது, ஆரோக்கியம், பயண விவரங்கள் மற்றும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவருடன் ஏதேனும் தொடர்பு ஏற்பட்டுள்ள போன்ற கேள்விகள் கேட்கப்படும் அதன்மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு, சராசரி மற்றும் அதிகம் என மூன்று நிலைகளில் தெரிவிக்கப்படுகிறது.

பயனாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பயனாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

அதுமட்டுமின்றி இந்த மூன்று நிலைகளில் பயனாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் ஜியோ வழங்குகிறது. இதுதவிர ஜியோ டூல் தேசிய மற்றும் மாநில அளவில் பயனாளர் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பலோ 247 என அழைக்கப்படும்

அப்பலோ 247 என அழைக்கப்படும்

கொரோனா பாதிக்கும் ஆபத்து உள்ளதா என்பது குறித்து கண்டறிய உதவும் ஏர்டெல் டூல் ஆனது அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பலோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின் வழிகாட்டுதல் படி செயல்படும் என தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

தங்கள் பயனர்களின் அறிகுறி

தங்கள் பயனர்களின் அறிகுறி

ஜியோவின் இந்த டூல் போலவே ஏர்டெல் சேவையிலும், தங்கள் பயனர்களின் அறிகுறி போன்ற விவரங்களின் அடிப்படையில் அவர்களுக்கான பரிந்துரைகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த இரண்டு சேவைகளிலும் கொரோனா தொற்று பற்றிய அடிப்படை விவரங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்

உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்

இங்கு வழங்கப்படும் தகவல்கள் முதன்மையானது இல்லை. அறிகுறிக்கு வாய்ப்புள்ளது என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதேபோல் இந்த தகவல்களை வைத்து மட்டுமே கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டாம். கொரோனா பரவாமல் இருக்கு இதுவும் ஒரு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
covid19 self diagnosis: jio, airtel launch new services

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X