ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த ரோபோக்கள்.! என்ன சிறப்பு தெரியுமா?

|

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று 100 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,549ல் இருந்து 2,649 ஆக உயர்வடைந்தது. 27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்தும், 51 ஆயிரத்து 401 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 81 ஆயிரத்து 970 ஆக உயர்வடைந்தது.

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதனை தடுக்கம் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு
நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை
அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு

குறிப்பாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உதவும் விதமாக

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக ரோபோக்களைராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

சேர்ந்த க்ளப் பஃர்ஸ்ட்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த க்ளப் பஃர்ஸ்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் புதிய வகை ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக
உருவாக்கப்பட்டுள்ளது.

இல்லையா என்பதை

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் புவனேஷ் மிஷ்ரா, இந்த ரோபோக்கள் மனிதர்களின் உடல்
வெப்பநிலையை பரிசோதிக்கும், மனிதர்கள் முககவசம் அணிந்துள்ளனரா இல்லையா என்பதை கண்டுபிடித்து அவர்களுக்குஎச்சரிக்கை செய்யும் என தெரிவித்துள்ளனர்.

Jio செய்த அதிரடி மாற்றம்! மலிவு விலையில் தாராளமான டேட்டா வழங்கும் வவுச்சர் நன்மைகள்!Jio செய்த அதிரடி மாற்றம்! மலிவு விலையில் தாராளமான டேட்டா வழங்கும் வவுச்சர் நன்மைகள்!

வேலைப்பளு குறையும்

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொற்று பரவி வரும் நிலையில்இது வேலைப்பளு குறையும் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
COVID19 Pandemic: Jaipur Company Developed Robots to Help Health Workers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X