Home
News

செல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் வைரஸ் உயிர் வாழுமா? உஷார்.!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன், பின் என சூழ்நிலையைப் பிரிக்கும் அளவிற்கு கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.

செல்போன் தொடுதிரையில் படரும்

செல்போன் தொடுதிரையில் படரும்

இந்நிலையில் செல்போன் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் சுமார் நான்கு வாரங்கள் வரை உயிர்வாழும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே செல்போன் பயன்படுத்துபவருக்கு அது பரவும் வாய்ப்பு சற்று அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

28நாட்கள் கூட நீடித்திருக்கும்

28நாட்கள் கூட நீடித்திருக்கும்

அதேபோல் வங்கிகள், ஏடிஎம்களில் பெறப்படும் ரொக்கப்பணம், கண்ணாடி போன்ற பொருட்களில் இந்த கொரோனா வைரஸ் ஆனது 28நாட்கள் கூட நீடித்திருக்கும் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மென்பொருட்கள் மீது படரும் வைரஸ் நீண்ட காலம் நீடித்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 சார்ஸ், கோவ்-2

சார்ஸ், கோவ்-2

அன்மையில் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சார்ஸ், கோவ்-2 ஆயுளை மூன்று வெப்பநிலையில் சோதித்தனர், அதில் வெப்பம் அதிகரித்தால் கொரோனா வைரஸ் உயிர்வாழும் விகிதங்கள் குறைந்து உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்கள், ரூபாய்

மேலும் கொரோனா வைரஸ், செல்போன்கள், ரூபாய் நோட்டுகள், போன்ற பொருட்களில் 28நாட்கள் வரை குளிர்ந்த இருண்ட நிலையில் வாழுமுடியும் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 டிகிரி செல்சியஸில்

குறிப்பாக விஞ்ஞானிகள் 20 டிகிரி செல்சியஸில் சார்ஸ், கோவ்-2 மென்மையான மேற்பரப்பில் மொபைல் போன் திரைகளைப் போல கண்ணாடி எஃகு மற்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் 28நாட்கள் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.

16மணி நேரத்திற்கும் குறைவாக உயிர்வாழும்

16மணி நேரத்திற்கும் குறைவாக உயிர்வாழும்

பின்பு 30 டிகிரி செல்சியஸில், உயிர்வாழும் வீதம் ஏழு நாட்களாகக் குறைந்தது 40 டிகிரி செல்சியஸில் (104 டிகிரி பாரன்ஹீட்) வெறும் 24 மணி நேரமாகக் குறைந்தது. மேலும் பருத்தி போன்ற நுண்ணிய மேற்பரப்பில் இந்த வைரஸ் குறுகிய காலத்திற்கே உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை உயிர்வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Covid virus ‘survives for 28 days’ in lab conditions: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X