என்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்!

|

கொரோனா தொற்று நோய் நாடுமுழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத அளவிற்கு கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. முன்னதாக அறிிவித்த ஊரடங்கானது முழுமையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா கவச உடை தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்ததன் காரணமாக பல்வேறு விதிமுறைகளோடு இந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அனில் அம்பானியின் மூத்த மகனான அன்மோல் அம்பானி

அனில் அம்பானியின் மூத்த மகனான அன்மோல் அம்பானி

இந்தநிலையில் அனில் அம்பானியின் மூத்த மகனான அன்மோல் அம்பானி., கொரோனா என்பது புதிய மத வழிபாட்டு முறை எனவும் ஊரடங்கெல்லாம் தேவையில்லை எனவும் டுவிட் செய்திருப்பது பலரையும் பல்வேறு கோணங்களை சிந்திக்க வைத்துள்ளது.

மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பார்

மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பார்

அனில் அம்பானியின் மூத்த மகனான அன்மோல் அம்பானி ரிலையன்ஸ் கேப்பிடல்ஸ் நிிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார். 29 வயதான இவர் கோவிட் தொற்றுநோயை உலகளாவிய சதி என கருத்து தெரிவித்துள்ளார். அனில் அம்பானி மற்றும் டினா அம்பானியின் மூத்த மகனான அன்மோல் அம்பானி பிரபல தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் கூச்ச சுபாவத்தோடு மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பார் என கூறப்படுகிறது. மீடியா கூச்சம் உள்ள கோடீஸ்வரர் (a media shy billionaire) என வர்ணிக்கப்படுகிறார்.

கொரோனா ஊரடங்கு குறித்த பதிவு

அன்மோல் அம்பானி டுவிட்டர் கணக்கில் வெறும் 27,000 பின்பற்றுபவர்களே இருந்த பட்சத்திலும் இவரது கொரோனா ஊரடங்கு குறித்த பதிவு தலைப்பு செய்தியாக மாறியது. இவரது டுவிட்டர் பதிவு பலரது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா முழுவதும் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளும், இரவு நேர ஊரடங்கையும் விமர்சிக்கும் வகையில் இது இருக்கிறது.

பதிவிட்டுள்ள டுவிட்-க்கு பல்வேறு கருத்துகள்

பதிவிட்டுள்ள டுவிட்-க்கு பல்வேறு கருத்துகள்

மீடியா கூச்சம் உள்ள கோடீஸ்வரர் என விமர்சனத்தை புறந்தள்ளி வைக்கும் வகையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை விமர்சித்து அதற்கு எதிரான கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட் குறித்து பார்க்கலாம்.

அன்மோல் அம்பானி பதிவிட்ட டுவிட்

அதில் தொழில்முறை நடிகர்கள் தங்கள் படங்களின் படப்பிடிப்பைத் தொடரலாம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் இரவு வரை தங்கள் கிரிக்கெட் விளையாட்டை விளையாடலாம். தொழில்முறை அரசியல்வாதிகள் வெகுஜன மக்களுடன் தங்கள் பேரணியை தொடரலாம். ஆனால் தொழில்நிறுவனங்கள் தொழிலை தொடங்குவதும், வேலைக்கு செல்வதும் அத்தியாவசியமானது இல்லையா என டுவிட் செய்துள்ளார்.

கோவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கலாம்

கோவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கலாம்

அதோடு மட்டுமின்றி முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போடுவது ஆகியவற்றுக்கு எதிரான பிரபலங்களின் டுவிட்டுக்கு ரீடுவிட் செய்துள்ளார். அதேபோல் இந்திய ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தொற்றுநோயை சமாளிக்க பூட்டுதல்கள் அறிவிப்பதற்கு பதிலாக கோவிட்-19 சோதனையை அதிகப்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும் எனவும் பொருளாதார ரீதியாக மிகவும் சாத்தியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Covid is the new dogmatic religious cult of our times: Anmol Ambani Tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X