Home
News

டெஸ்லா கார், ஐபோன், தங்க கட்டி கூட தரோம் தடுப்பூசி மட்டும் போடுங்க.. பரிசுகளை வாரி வழங்கும் நாடு..

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்களுக்குத் தடுப்பூசி போட ஹாங்காங்கில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த முயற்சியில் உள்ளூர் வணிகங்களும் COVID-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சில நம்ப முடியாத சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால் பம்பர் லாட்டரி போல் பரிசுகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே செல்கிறது.

தடுப்பூசி மட்டும் போடுங்க பரிசுகளை வாரி வழங்குறோம் - ஹாங்காங்

தடுப்பூசி மட்டும் போடுங்க பரிசுகளை வாரி வழங்குறோம் - ஹாங்காங்

இந்த புதிய முயற்சியின் படி, தடுப்பூசி பெறுபவர்களுக்குத் தங்கக் கட்டிகளை வெல்லும் வாய்ப்பை ஹென்டர்சன் லேண்ட் டெவலப்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு டெவலப்பர் நிறுவனமான சன் ஹாங் கை பிராபர்டீஸ் லிமிடெட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நபர்களுக்குப் புத்தம் புதிய ஐபோன்களை வழங்குகிறது என்று அறிவித்துள்ளது. இதையே நீங்கள் பிரமாதம் என்று நினைத்தாள், கீழே இருக்கும் பட்டியலில் உள்ள பரிசுகளைப் பார்த்தால் உடனே ஹாங்காங் கிளம்பிவிடுவீர்கள்.

தடுப்பூசி போட்டா டெஸ்லா காரா?

தடுப்பூசி போட்டா டெஸ்லா காரா?

ஆஸ்திரேலியாவின் தொழில்துறை சொத்து நிறுவனமான குட்மேன் குழுமம் ஒரு படி மேலே சென்று, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட ஹாங்காங்கில் வசிப்பவர்களுக்கு 'டெஸ்லா மாடல் 3' கார் உட்பட 1 மில்லியனுக்கும் அதிகமான பரிசுகளை லாட்டரி மூலம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்ட டெஸ்லா காரா? இது நம்ம ஊர் லிஸ்ட்ல இல்லாம போச்சே என்று சற்று வருத்தமாகத் தான் உள்ளது.

பரிசு மதிப்பு மட்டும்  120 மில்லியனா?

பரிசு மதிப்பு மட்டும் 120 மில்லியனா?

ஷாப்பிங் வவுச்சர்கள், குறைந்த வருமானம் உடையவர்களுக்கு மானியம் உள்ளிட்ட தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பல்வேறு தொழில்துறை குழுக்களும் வெவ்வேறு பரிசுகளை அறிவித்துள்ளன. பல்வேறு லாட்டரி முறை பரிசு மற்றும் வெகுமதி திட்டங்களின் மதிப்பு, செய்தி அறிக்கைகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது, HK $ 120 மில்லியனைத் தாண்டியுள்ளது" என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் வாராந்திர மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்பிற்கு பின்னர் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது

அறிவிப்பிற்கு பின்னர் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது

மொத்த தடுப்பூசி முன்பதிவுகள் மே மாத இறுதியில் அதிகரித்ததால், வணிகங்களின் பல்வேறு பரிசுகளின் அறிவிப்பு செயல்படுவதாகத் தெரிகிறது. செய்தி நிறுவனத்தின்படி, ஹாங்காங்கின் 7.5 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 15.1 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
COVID-19 Vaccination Can Now Get You Tesla Car Gold Bar iPhone and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X