அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: யாருக்கெல்லாம் இ-பாஸ் கிடைக்கும்., விண்ணப்பிப்பது எப்படி?

|

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசு இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்றுமுதல் மே 24 ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா முழு ஊரடங்கு

கொரோனா முழு ஊரடங்கு

சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரும் வாகன தணிக்கை மேற்கொள்கின்றனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் விதிமீறல்கள் வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது, கைப்பற்றினாலும் சிறது நேரத்தில் விடுவிக்க வேண்டும் எனவும் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 30 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்

அதேபோல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மே 24 ஆம் தேதி வரை இது நீடிக்கிறது. இதன் பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுகுறித்த கருத்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே-24 ஆம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு ஏற்படாது என குறிப்பிட்டார். அவ்வாறு நிலை வந்தால் ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

பயணம் மேற்கொள்ள இ-பாஸ்

பயணம் மேற்கொள்ள இ-பாஸ்

தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். ஆரம்பத்தில் இ-பாஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற விவரங்களை பார்க்கலாம். திருமணங்கள், இறுதி சடங்குகள், நேர்காணல் அல்லது தேர்வுகளுக்கு பயணிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவோர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இ-பாஸ் இன்றி பயணம் அனுமதிக்கப்படும் நபர்கள்

இ-பாஸ் இன்றி பயணம் அனுமதிக்கப்படும் நபர்கள்

இ-பாஸ் இன்றி பயணம் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்து பார்க்கையில், பால், செய்தித்தாள், கூரியர் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ் சேவை போன்று அத்தியாவசிய சேவையில் பணிபுரிபவர்களுக்கும் மட்டும் இ-பாஸ் விலக்கு. அதேபோல் நடைபாதை கடைகள்/காய்கறிகள், பூக்கள் விற்கும் விற்பனையாளர்கள் மதியம் 12 மணிவரை செயல்படலாம். அரசு அதிகாரிகள் தங்களது செல்லுபடியாகும் அடையாள அட்டையை காட்ட வேண்டும். அச்சு மற்றும் மின்னணி ஊடக பணியாளர்கள் அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்.

இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள்

இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள்

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்., https://tnepass.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசு அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுக வேண்டும். மொபைல் எண்ணை உள்ளிட்ட அதில் கிடைக்கும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். நீங்கள் பயணிக்கும் வாகனத் தேர்வை கிளிக் செய்த பிறகு, தங்களது பெயர், முகவரி (வீடு மற்றும் செல்லும்இடம்), பயண வரம்பு ( மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே) என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் பயணத்தின் நேரம், எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் பயணர்கள் விவரம், வாகன விவரம், அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் உள்ளிட வேண்டும்.

மருத்துவ அவசரநிலை

மருத்துவ அவசரநிலை

பயணம் மேற்கொள்ளும்போது ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது மருத்துவ அவசர நிலை என்றால் மருத்த சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம், திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். இ-பாஸ் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்கலாம். விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டதும், தங்கள் ஆவணங்கள் மற்றும் சமர்பிப்பு விவரங்கள் சரிபார்க்கப்படும், அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதும் இ-பாஸ் வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Covid-19 Lockdown: How to Apply and Get E-Pass in Tamil Nadu

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X