சார்., நாங்க கொடுக்குறோம்: ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ரூ.3 கோடி நிதியுதவி: சியோமி, ஒன்பிளஸ் அதிரடி!

|

ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்குவதாக சியோமி நிறுவனமும், கோவிட்-19 எமர்ஜென்ஸிகளை நிலைப்படுத்த ஒன்பிளஸ் நிறுவனமும் களமிறங்கியிருக்கிறது.

சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள்

சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள்

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சரிந்து வருகிறது. மருத்துவ பற்றாக்குறைகள் ஏற்பட்டு வருகிறது. சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் சுமைகளை குறைக்கும் வகையில் உதவ முன்வந்திருக்கிறது.

கோவிட்-19 அவசரநிலை

கோவிட்-19 அவசரநிலை

கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை நிவர்த்தி செய்ய ஒன்பிளஸ் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை அறிவித்திருக்கிறது.

1000-த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள்

1000-த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள்

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தொடர்ந்து 1000-த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வாங்குவதற்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்படும் இடங்களில் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு அல்லது மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு உதவ சியோமி திட்டமிட்டிருக்கிறது. அந்த பகுதியில் தட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கள பணியாளர்களை ஆதரிக்கும் நோக்கில் நிதியுதவி

முன்கள பணியாளர்களை ஆதரிக்கும் நோக்கில் நிதியுதவி

அதுமட்டுமின்றி சியோமி நிறுவனம் நன்கொடை தளமான கிவ்இந்தியாவுடன் இணைந்து கோவிட்-19 தொழிலாளர்களை ஆதரிக்க நிதி திரட்டல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. முன்கள பணியாளர்களை ஆதரிக்கும் நோக்கில் ரூ.1 கோடி நிதி திரட்டும் கிவ்இந்தியாவை ஆதரிக்க சியோமி நிறுவனம் முன்வந்திருக்கிறது. இந்த நன்கொடை பக்கத்தை தனது எம்ஐ.காம்-ல் நேரலையில் வைத்திருக்கிறது நிறுவனம். அதுமட்டுமின்றி பணம் திரட்ட உதவும் நடவடிக்கையாக சமூக ஊடக விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை குறைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், பிளாஸ்மா

மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், பிளாஸ்மா

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து பார்க்கையில், கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது சமூகவலைதள திறனை பயன்படுத்துவதாக ஒன்பிளஸ் அறிவித்திருக்கிறது. கோவிட்-19 தொடர்பான எந்தவொரு கோரிக்கையையும் நிவர்த்தி செய்ய டுவிட்டரை பயன்படுத்தவாக தெரிவித்திருக்கிறது. OnePlus India (@OnePlus_IN) என டேக் செய்து #COVIDEmergency என்ற ஹேஷ்டேக்கை பயனர்கள் தங்கள் டுவிட்டில் பயன்படுத்தும்படியும், இதன் மூலம் பயனர்களின் தகவல் வெளிப்படுத்தப்படும் எனவும் மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், பிளாஸ்மா அல்லது பிற சிக்கல்களுக்கான உதவியை இதன்மூலம் பெறலாம் எனவும் தெரிவித்திருக்கிறது.

பரவும் போலித் தகவலும் வதந்திகளும்

பரவும் போலித் தகவலும் வதந்திகளும்

சமூகவலைதளங்களில் சில நபர்களால் போலித் தகவலும் வதந்திகளும் பரப்பப்பட்டு வந்தாலும் உதவி தேடும் பயனர்களுக்கு சமூகவலைதளம் பிரதான உதவித்தளமாக இருந்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களும் ஆக்ஸிஜன், மருத்துவ படுக்கைகள் உள்ளிட்ட உதவிகளுக்கு ஒருவருக்கொருவரை இணைக்க உதவி வருகிறது.

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Covid-19 India: Xiaomi Announced to Donate Rs.3 Crore For Oxygen Cylinders

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X