சிரித்த சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பாடம் சொல்லி கொடுத்த மோடி.!

இந்திய நாட்டின் பிரதமர் ஆன நரேந்திர மோடி, சமீபத்தில் குஜராத்தில் உள்ள லார்சன் மற்றும் டூப்ரோவின் ஆர்மர்ட் சிஸ்டம்ஸ் காம்ப்ளக்ஸை (ஆயுத அமைப்பு கட்டிடத்தை) திறந்து வைத்தார். இந்த ஆலை ஏன் குஜராத்தில் அமை

|

இந்திய நாட்டின் பிரதமர் ஆன நரேந்திர மோடி, சமீபத்தில் குஜராத்தில் உள்ள லார்சன் மற்றும் டூப்ரோவின் ஆர்மர்ட் சிஸ்டம்ஸ் காம்ப்ளக்ஸை (ஆயுத அமைப்பு கட்டிடத்தை) திறந்து வைத்தார். இந்த ஆலை ஏன் குஜராத்தில் அமைக்கப்பட்டது?

சிரித்த சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பாடம் சொல்லி கொடுத்த மோடி.!

இதை ஏன் நரேந்திர மோடி திறந்து வைத்தார்? போன்ற கேள்விகளுக்கான தருணம் மற்றும் இடம் இதுவல்ல என்பதால் நாம் நேரடியாக நேர்மறையான விடயங்களுக்கும் செல்வோம்.

 துப்பாகி தயாரிப்பு:

துப்பாகி தயாரிப்பு:

இந்திய இராணுவத்திற்கு பணியாற்ற உள்ள எல் அண்ட் டி நிறுவனம் ஆனது, இந்த திட்டத்தின் கீழ் 100 என்கிற எண்ணிக்கை அளவில் கே9 வஜ்ரா -15 மிமீ துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது.

பலமாக வாழ்த்திய மோடி!

"இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டைப் பாதுகாக்க, கே-9 வஜ்ரா துப்பாக்கிகளை உருவாக்கும் லார்சன் & டூப்ரோவின் ஒட்டுமொத்த குழுவையும் நான் வாழ்த்துகிறேன்," என்று மோடி ட்வீட் செய்து இருந்தார் என்பதும், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதே நமது முயற்சியாகும். தனியார் துறையும் இந்த முயற்சியை ஆதரிப்பதும், ஒரு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குவதும் என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது" என்று மற்றொரு ட்வீட்டில் மோடி கூறி இருந்தார்.

வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்:

அத்துடன் நில்லாது, பிரதம மந்திரி தனது ட்விட்டர் தலத்தில் தன்னை ஒரு ராணுவ டாங்கிக்குள் இறக்கி கொண்ட ஒரு குறுகிய வீடியோவையும் பகிர்ந்தார். அதற்கு "ஹெசிராவில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் ஆயுத அமைப்பு காம்ப்ளக்ஸில் டாங்கிகளை சோதனை செய்கிறேன்" என்ற தலைப்பையும் கொடுத்தார்.

இந்த ஆலையின் திட்டம் என்ன:

இந்த ஆலையின் திட்டம் என்ன:

சூரத் நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஹெஸிராவில் உருவாக்கப்படும் இந்த ஆயுத அமைப்பு ஆலை ஆனது தற்போது வஜ்ரா துப்பாக்கிகளை மட்டுமே உருவாக்கினாலும் கூட, வருங்காலத்தில் அது முன்னேறிய பீரங்கி ஹெவிட்ஸர்ஸ், எதிர்கால காலாட்படை போர் வாகனங்கள், எதிர்கால பியூச்சர்-காம்பட் போர் வாகனங்கள் மற்றும் எதிர்கால முக்கிய போர் டாங்கிகள் போன்ற மேம்பட்ட கவச தளங்களை உற்பத்தி மற்றும் ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவுடன் கூட்டு வைத்த எல் அண்ட் டி:

தென் கொரியாவுடன் கூட்டு வைத்த எல் அண்ட் டி:

மொத்தமுள்ள 755 ஏக்கர்களில் சுமார் 40 ஏக்கர்கள் என்கிற பரப்பளவில் விரிந்து கிடைக்கும் எல் & டி நிறுவனத்தின் இந்த ஆயுத உற்பத்தி வளாகத்தில் தான் கே9 வஜ்ரா வகை துப்பாக்கிகள் உற்பத்தி ஆக உள்ளது. கே 9 வஜ்ரா ஒப்பந்தம் ஆனது அடுத்த 42 மாதங்களில் 100 துப்பாக்கி அமைப்புகளை விநியோகிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் தனியார் நிறுவனத்துடன் ஆன மிகப்பெரிய ஒப்பந்தமாகும். எல் & டி நிறுவனம், தென் கொரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான ஹன்வா கார்ப்பரேஷனுடன் துப்பாக்கிகளுக்கான தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிறைவேறப்போகும் கனவு:

நிறைவேறப்போகும் கனவு:

அந்த ஒப்பந்தத்தில், கொரியா குடியரசுத் தலைவர் வாங் ஜங் ஹாங், எல் அண்ட் டி குழும தலைவர் ஏ.எம் நயிக் ஆகியோர் உடன் இந்திய பாதுகாப்பு மந்திரி ஆன நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு முழுமையான போர் டாங்கி என்கிற கனவை சாத்தியமாக்குவதற்காகவே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்று மூத்த எல் அண்ட் டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

Best Mobiles in India

English summary
courtesy make in india gujarat gets country s first private howitzer guns manufacturing unit : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X