கடைக்காரரை தாக்கிய இளைஞருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்:2மாதங்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக் கூடாது

|

இப்போது சமூக வலைதளங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இதுபோன்ற வலைதளங்களில் செய்திகள், தகவல், அரட்டை உள்ளிட்ட பல்வேறு உதவிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.

2மாதங்களுககு சமூக

இந்நிலையில் 2மாதங்களுககு சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என நூதன நிபந்தனையுடன் இளைஞர் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இவர் மீது வ

அன்மையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த என்ற மாவட்டத்தை சேர்ந்த ஹேரேந்திர தியாகி என்ற இளைஞர், கடைக்காரர் ஒருவரை தாக்கியதாக கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்பு நான்கு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.!

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட தியாகி

மேலும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட தியாகி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார், அதில் நான் சென்ற ஆண்டு நடந்த முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 75சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றேன். பின்பு வேளாண் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன்.

கொரோனா காரணமாக தேர்வு

தற்போது கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே நான் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும், எனக்கு ஜாமீன் வழங்கப்படாவிட்டால் எனது எதிர்காலம் பாழாகிவிடும் என்று இளைஞர் தியாகி மனவில் கூறினார்.

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!

ஹரேந்திர தியாகிக்கு சில நூத

இதைதொடர்ந்து ஹரேந்திர தியாகிக்கு சில நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விண்ணப்பதாரர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவற்றை பயன்படுத்தக் கூடாது.

ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.!

லுத்த இந்த நிபந்தனைகள்

விண்ணப்பதாரர் தான் எழுதவிருக்கும் தேர்வில் மட்டுமே கவனம் செலுத்த இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது எனவும், மேலும் ஐந்து மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வர வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

 நிபந்தனைகளை மீறி சமூக

குறிப்பாக நிபந்தனைகளை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தெரியவந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Keep off social media for 2 months’: Court grants bail to 18-year-old: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X