Home
News

ஹைப்பர்லூப் போக்குவரத்தில் பயணிப்பது எப்போது? இதோ தகவல்.!

கடந்த 2012ஆம் ஆண்டு எலான் மஸ்க் என்ற விஞ்ஞானி மிக விரைவான போக்குவரத்தான 'ஹைப்பர்லூப்' என்ற ஐடியாவை அறிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு எலான் மஸ்க் என்ற விஞ்ஞானி மிக விரைவான போக்குவரத்தான 'ஹைப்பர்லூப்' என்ற ஐடியாவை அறிவித்தார். சுமார் 1000 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஹைப்பர்லூப் வாகனம் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல் ஒரு மூடிய குழாயில் மிக வேகமாக பயணிக்கும்

ஹைப்பர்லூப் போக்குவரத்தில் பயணிப்பது எப்போது?  இதோ தகவல்.!

இந்த வாகனத்தை தான் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல் இதுகுறித்து ஐடியாவை பலரும் பகிர்ந்து கொள்ளலாம் என மாஸ்க் அறிவித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்கு பின்

ஆறு வருடங்களுக்கு பின்

ஆறு வருடங்களுக்கு பின் தற்போது மாஸ்க் அவர்களின் கனவை நனவாக்க இரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளது. ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜிஸ் மற்றும் விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தற்போது இந்த போக்குவரத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த அதிவேக போக்குவரத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

விர்ஜின் ஹைப்பர்லூப்

விர்ஜின் ஹைப்பர்லூப்

முதல்கட்டமாக விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் ஸ்பெயின் நாட்டின் ரயில்வே துறையுடன் இதுகுறித்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு $500 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் பொதுமக்களிடம் இருந்து இந்த திட்டத்திற்காக €126 மில்லியன் திரட்டவும் விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தொகையின் மூலம் ஆரம்பகட்ட பணியை தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளது.

சி.இ.ஓ ராப் லாயிடு

சி.இ.ஓ ராப் லாயிடு

இதுகுறித்து விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் சி.இ.ஓ ராப் லாயிடு என்பவர் கூறியபோது, 'இந்த போக்குவரத்து திட்டம் வெற்றி பெற்றால் அது விமானத்தைவிட வேகமாக செல்லும் வாகனமாக இருக்கும். இந்த அற்புதமான திட்டத்திற்கு ஸ்பெயின் கைகொடுத்துள்ளது. ஸ்பெயின் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் சோதனை நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்

 ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன்

ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன்

அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஸ்பெயின் நாடு முன் வந்ததற்கு பெருமை கொள்வதாகவும், இதன் மூலம் புதிய சாதனை படைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ராப் லாயிடு மேலும் தெரிவித்துள்ளார்.


அதேபோல் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜி நிறுவனத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் இதுகுறித்த ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும், இந்த போக்குவரத்திற்கான ஹைப்பர்லூப் டியூப் செய்வதில் இந்நிறுவனம் தங்களுகு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம்

கடந்த ஜூலை மாதம்

சுமார் 4.0 விட்டம் உள்ள ஒரு டியூபில் பயணிகள் ஒரு கேப்ஸூலை போல அமர வைக்கப்பட்டுவிட்டு பின் இந்த வாகனம் இயக்கப்படும். இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட பணி வரும் 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது.

கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்தை சீனாவில் நிறைவேற்ற சீனாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் சி.இ.ஓ டிர்க் அல்பார்ன் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'உலகத்தை மிகவும் சுருக்க இந்த போக்குவரத்து உதவும் என்றும், சீனா இந்த திட்டத்திற்காக $300 பில்லியன் வருடம் ஒன்றுக்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சீனா

சீனா

சீனாவில் முதன்முதலாக இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்திற்கு கையெழுத்திடப்படடுள்ள அதே நேரத்தில் விரைவில் துபாய் மற்றும் உக்ரைனிலும் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகவும் டிர்க் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Could the Hyperloop transform the way we travel forever: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X