1 ஆண்டுக்கு இலவசம்.. OTT பிரியர்களுக்கான Perfect பிளான்.. 730GB டேட்டாவுடன் 19 ஓடிடி.. Vi நீ வேற லெவல் பா!
இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தான் தொழில்துறையின் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது என்று கூறினால் உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். அந்த திட்டத்தின் விலை ரூ.4999 ஆகும்
1 வருடம் அல்லது 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வந்தாலும் கூட, இன்னுமும் இது மிகவும் விலை உயர்வான திட்டமாகவே தெரிகிறது என்பவர்கள், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்த பின்னர் அப்படி சொல்ல மாட்டார்கள்!

வோடபோன் ஐடியா ரூ.4999 ப்ரீபெய்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.4999 ப்ரீபெய்ட் திட்டத்தின் "பொதுவான" நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். ஆக டெய்லி 2ஜிபி என்றால் 365 நாட்கள் x 2ஜிபி என மொத்தம் 730ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை , விஐ எம்டிவி சந்தாவின் கீழ் 19 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்
மேலும் இந்த திட்டத்தின் கீழ் 1 வருட அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பிரைம் லைட் சந்தாவும் கிடைக்கும். சுவாரசியமாக இந்த திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் ஆகிய நன்மைகளும் உள்ளன. அறியாதோர்களுக்கு வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் என்றால் வாரம் முழுவதும் பயன்படுத்தாத டெய்லி டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.
வோடபோன் ஐடியா, இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் டேட்டாவை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தது மிகவும் விந்தையான ஒரு நடவடிக்கை ஆகும். அதுவும் சேர்க்கப்பட்டு இருந்தால் இது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி என அதிகபட்சமாக வரையறுக்கப்பட்ட அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி இருக்கும். ஆனால் இது ஒரு வருடத்திற்கு ஏராளமான ஓடிடி நன்மைகளுடன் வருவதால், ரூ.4999 க்கு வொர்த்து தான்!
ஒருவேளை உங்களுக்கு மலிவான விலையில் அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா வேண்டுமென்றால், நான்-ஸ்டாப் ஹீரோ பிரிவின் கீழ் வரும் இந்த 2 திட்டங்களையும் கருத்தில் கொள்ளலாம். ஒன்று - ரூ.649; இன்னொன்று - ரூ.979. சுவாரசியமாக இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள விஐ வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.
வோடபோன் ஐடியா ரூ.649 ப்ரீபெய்ட் நான்-ஸ்டாப் ஹீரோ திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.649 திட்டமானது 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் வரம்பற்ற டேட்டாவுடன் வருகிறது. இருப்பினும், அதிவேக டேட்டா 300ஜிபி ஆக வரையறுக்கப்பட்டு உள்ளது. ரூ.649 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும்.
டேட்டா நன்மையை தவிர்த்து, மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்ஸ் ஆகியவைகளையும் வழங்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குவதால் இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) போன்ற எந்த கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.
வோடபோன் ஐடியா ரூ.979ப்ரீபெய்ட் நான்-ஸ்டாப் ஹீரோ திட்டத்தின் நன்மைகள்: இது 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும் இது வரம்பற்ற டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய முக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதிவேக டேட்டாவும் 300ஜிபி என்று வரையறுக்கப்பட்டுள்ளது
ரூ.979 திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஓடிடி சந்தா ஒன்றும் உள்ளது. அது விஐ மூவீஸ் அண்ட் டிவி (Vi Movies & TV) சந்தா ஆகும். விஐ மூவீஸ் அண்ட் டிவி சந்தா வழியாக இந்த திட்டத்தின் பயனர்கள் 19 வெவ்வேறு ஓடிடி தளங்களிலிருந்து 84 நாட்களுக்கு கன்டென்ட்களை அணுகலாம்.


Click it and Unblock the Notifications








