கொரோனா எச்சரிக்கை- கையில லேப்டாப், செல்போன் இருக்கா: அப்போ இத உடனே பண்ணுங்க!

|

சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளும்போது இருமல் சத்தம் கேட்டால் அச்சம் கொள்ள வேண்டாம். இதோ அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

ஒரே நாளில் 41 பேர் உயிரழப்பு

ஒரே நாளில் 41 பேர் உயிரழப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்

சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்

அதேபோல் கொரோனா வைரஸ் பராவமல் இருக்க சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் எனவும் நோயை தடுக்கும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அன்றாடம் மற்றும் அடிப்படை பொருட்களை சுத்தம் செய்தாலும் உடலோடு ஒட்டிய பாகமாக இருக்கும் ஸ்மார்ட் போன், மடிக்கணினி மற்றும் பிற முக்கிய பொருட்களில் சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம்.

எலக்ட்ரானிக் பொருட்களில் பாக்டீரியா

எலக்ட்ரானிக் பொருட்களில் பாக்டீரியா

ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் தேங்கிவிடுகின்றன. குறிப்பாக லேப்டாப் திரைகளில் பாக்டீரியா வேகமாக வளர்ந்து விடுகிறது. எனவே இது அனைத்தையும் முறையான திரவங்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் லேசான ஈரத் துணியை பயன்படுத்தியாவது சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஹெட்செட்கள் பயன்படுத்துவது நல்லது

ஹெட்செட்கள் பயன்படுத்துவது நல்லது

அதேபோல் போன் பேசும் போது நேரடியாக காதில் வைத்து பேசுவதற்கு பதிலாக ஹெட்செட் பயன்படுத்துவது நல்லது என தெரிவிக்கப்படுகிறது. அப்படி நேரடியாக பேசும் பட்சத்தில் டிஸ்பிளேயில் உள்ள கிருமிகள் நேரடியாக முகத்திற்கு செல்கிறது. ஹெட்செட்களை அவ்வப்போது சுத்தம் செய்திட மறந்திட வேண்டாம்.

கொஞ்சம் கேப் விடுங்கப்பா: விற்பனைக்கு வந்தது முதல் 5G போன்- விலை என்ன தெரியுமா!கொஞ்சம் கேப் விடுங்கப்பா: விற்பனைக்கு வந்தது முதல் 5G போன்- விலை என்ன தெரியுமா!

துடைத்துவிட்டு காதில் வைத்து பேசலாம்

துடைத்துவிட்டு காதில் வைத்து பேசலாம்

ஒருவர் பேசிவிட்டு தரும்போது அதை அப்படியே நம் காதில் வைத்து பேசக் கூடாது., ஒருசிலர் பேசும்போது எச்சில் தெரிக்குமாயின் அதோடு நம் கண்ணத்தில் வைத்து பேசும் நிலை ஏற்படும் எனவே அதை லேசாக ஒரு துடை துடைத்து விட்டு காதில் வைத்து பேசலாம்.

எலெக்ட்ரானிக் பொருட்களை பகிர வேண்டாம்

எலெக்ட்ரானிக் பொருட்களை பகிர வேண்டாம்

மற்றவர்களிடம் தங்களின் எலெக்ட்ரானிக் பொருட்களை பகிர வேண்டாம். அதேபோல் மற்றவர்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். அப்படி ஒருவேளை பிறர் கையில் செல்போன் போன்ற சாதனங்களை கொடுக்கும் நிலை வந்தால் அதை மீண்டும் உபயோகித்து பயன்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
Coronavirus Safety Tips: Follow These Tips To Clean Your Smartphones, Laptops

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X