வாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை தெரிந்து கொள்வது எப்படி?

|

கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ளவும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய ஹெல்ப்லைன் எண்களையும் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது என்பது தெரிந்ததே. +91-11-23978046 மற்றும் 1075 ஆகிய இரண்டு டோல்ஃப்ரீ எண்களை தேசிய உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வாட்ஸ் அப்

மேலும் தற்போது அரசு ஒரு வாட்ஸ் அப் பக்கத்தையும் கொரோனாவிற்காக உருவாக்கி உள்ளது. ‘மை கவர்ன்மெண்ட் கொரோனா ஹெல்ப்டெஸ்க்' என்ற பெயருடைய இந்த எண்ணில் தொடர்பு கொண்டு கொரோனா குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் மட்டுமே சேட் செய்ய முடியும்.

வாட்ஸ் அப் எண்ணில் சேட் செய்வதன் மூலம்

இந்த வாட்ஸ் அப் எண்ணில் சேட் செய்வதன் மூலம் தற்போது அப்டேட்டுக்கள், எந்தெந்த பகுதிகளில் கொரோனோவின் பாதிப்பு எவ்வளவு? மற்ற நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலை என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த ஒரே ஒரு எண்ணின் மூலம் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலாவி வரும் போலியான வதந்திகள் குறித்தும் இந்த எண்ணில் சேட் செய்து அதனை உறுதி செய்து கொள்ளலாம். இந்த வாட்ஸ் அப் எண் உண்மையில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தாராளமாக நம்பலாம்

Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?

#1

#1

இனி இந்த எண்ணை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்

1. முதலில் உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் எண்ணில் 90-131-51515 என்ற எண்ணை இணைத்து கொள்ளுங்கள்

#2

#2

அதன் பின்னர் வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்து காண்டாக்ட் லிஸ்ட்டில் இந்த குறிப்பிட்ட எண்ணை சியர்ச் செய்யுங்கள். அதன் பின் உங்கள் சேட்'ஐ தொடரலாம்

#3

#3

உங்களுடைய சந்தேகங்களை ஒவ்வொன்றாக கேள்வி வடிவில் கேளுங்கள். உதாரணமக கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்து கொள்ளும் அறிகுறிகள் என்ன?

#4

#4

உங்கள் கேள்வி பதிவு செய்யப்பட்டவுடன் ஆட்டோமெட்டிக் மூலம் உங்களுக்கு பதில் கிடைக்கும்

#5

#5

மேலும் ‘மெனு' என்று மெசேஜ் அனுப்பி மெயின் செக்சனுக்கு செல்லும் வசதியும் இதில் உண்டு

Best Mobiles in India

English summary
Coronavirus in India: How to use MyGov helpdesk on WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X