கொரோனா தாக்கம்: டிஜிட்டல் பேமன்ட் அதிகம் பயன்படுத்தும் மக்கள்.!

|

கடந்த மார்ச் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் வங்கிகளை டிஜிட்டல் பேமண்ட் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு தெரிவித்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்புகள்

கொரோனா பாதிப்புகள்

தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்க,மக்கள் மிகவும்கவனத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது, மேலும் பல்வேறு மக்கள் வீட்டிலிருந்து பணி செய்யத் தொடங்கிவிட்டனர்.

கொரோனா வைரஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பானது பணப் பரிமாற்றம் மூலம்தான் கொரோனா வைரஸ் எளிதாகப்
பரவுவதாகவும், பன நோட்டுகளில் அதிக நாட்கள் கொரோனா நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்து. பணம் ஒன்றுதான் எல்லாருடைய கைகளிலும் மாறி செல்லக் கூடியது...

20சதவிதிதமாக உயர்ந்துள்ளது

20சதவிதிதமாக உயர்ந்துள்ளது

தற்சமயம் பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக டிஜிட்டல் பேமன்ட் முறைகளுக்குள் மாறியுள்ளனர், இது குறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் ஒரு கூறுகையில்,கடந்த மாதம் பேடிஎம் பயன்படுத்தி பணம் செலுத்வோரின் எண்ணிக்கை 20சதவிதிதமாக உயர்ந்துள்ளது. பேடிஎம் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் ஒரே வாடிக்கையாளர்கள் பேடிஎம்மை மீண்ம் மீண்டும் பயன்படுத்துவது என அனைத்து எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளது.

12சதவிகிதமாக உயர்ந்துள்ளது

குறிப்பாக வாடிக்கையாளர்கள் பேடிஎம்மை பெட்ரோல் பங்குகளிலும், பொருள்கள் வாங்கும் கடைகளிலும் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர், பணத்தை பயன்படுத்தாமல் ஆஃப்லைன் மூலம் பேடிஎம்மில் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கையும் 12சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனக் கூறினார்.

தொடங்கியுள்ளனர்

மக்கள் இந்த பேடிஎம்மை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர், 1.6கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட பேடிஎம்மில் ஆன்லைன் பேமென்ட்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பேடிஎம்மில் ஆன்லைன் பேமென்ட்டும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் பேடிஎம் ஹஆல் இன் ஒன்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஹஆல் இன் ஒன்' QR கோடை எந்த UPI செயலியைக் கொண்டும் ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும்

டிஜிட்டல் பேமென்டை பயன்படுத்தி பணம்

இப்போது கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குப் பொருள்களை டெலிவரி செய்யும் கடை உரிமையாளர்கள் பேடிஎம் பயன்பாட்டையே அதிகளவில் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வல்லுநர்கள் முடிந்தளவு டிஜிட்டல் பேமென்டை பயன்படுத்தி பணம் செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Electronic payments look more appealing as people fear cash could spread coronavirus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X