கொரோனா வைரஸ்: சீனாவில் கூகுள் அலுவலகம் மூடப்பட்டது.!
சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்
குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் சீனா உள்ளிட்ட 16நாடுகளில் பரவி உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது,மேலும் சீனாவில் மட்டும் இதுவரை 170பேர் பலியாகி உள்ளனர். பின்பு 7000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

கூகுள் கிளை அலுவலங்கள்
சீனாவில் பல முக்கிய நகரங்களிலும், ஹாங்காங்கிலும் கூகுள் கிளை அலுவலங்கள் செயல்பட்டு வந்தன, குறிப்பாகஇந்த கொரனோ வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள்
நிறுவனம் மூடிவிட்டது.

இதேபோன்று தைவானில் உள்ள அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது. சமீபத்தில் சீனாவில் துவங்கப்பட்டுள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவன அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் பொறியியல் மையம்
குறிப்பாக இந்த வைரஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (Center for Systems Science and Engineering)ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் பயனர்கள் தங்கள் நகரத்திற்குள் வைரஸ் நுழைந்திருக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

உலக சுகாதார அமைப்பு
உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட நோயாளிகளிகன் நேரடி புதுப்பிப்புகளையும் கருவி காட்டுகிறது, இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சுட்டிக்காட்டும் ரேடார்கள் கொண்ட வரைபடத்தையும் இது காட்டுகிறது. குறிப்பாக உலகசுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நோய்களை கட்டுப்படுத்தும் மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வலைத்தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

எந்தெந்த நாடுகள்
அதாவது எந்தெந்த நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர் ஆபத்தில் உள்ளனர் என்பதை அறிய இந்த இணைப்பை பயன்படுத்தாலம் (https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6) இதில் குறிப்பிட்டுள்ளபடி, உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நோய்களை கட்டுப்பதும் மையங்களால் தரவை வலைத்தளம்
பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications