3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா: ஏடிஎம் மூலமாக வந்தது கண்டுபிடிப்பு: ஒரு நகரமே லாக்.,

|

3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு ஏடிஎம் மூலமாக தான் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது

கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் 3 சதவீதம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PM Modi சொன்னது இதுக்கு தானா: 3 பேரை தனியா தூக்கிய ஆரோக்கிய சேது ஆப்- எப்படி தெரியுமா?PM Modi சொன்னது இதுக்கு தானா: 3 பேரை தனியா தூக்கிய ஆரோக்கிய சேது ஆப்- எப்படி தெரியுமா?

6430 பேருக்கு தொற்று உறுதி

6430 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை அங்குமட்டும் 6430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோவாவில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு மட்டும் 100 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று

டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று

குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 112 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக உயர்வு

பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

இதையடுத்து சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.

3 ராணுவ வீரர்களுக்கு கோவிட்-19

3 ராணுவ வீரர்களுக்கு கோவிட்-19

குஜராத்தின் பரோடா பகுதியில் வசித்து வந்த 3 ராணுவ வீரர்களுக்கு கடந்த வியாழக்கிழமை கோவிட்-19 குறித்த சோதனை செய்தனர். ஆரம்ப காலத்தில் ஏடிஎம் பொதுவான பிரிவாக இருந்தது. அனைவரும் அதை பயன்படுத்தும் வகையில் ஒன்றாக பணத்தை எடுத்து சென்றனர்.

பரோடாவில், பாதுகாப்புப் பணி

பரோடாவில், பாதுகாப்புப் பணி

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பரோடாவில், பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வலுவான சிஆர்பிஎஃப்

வலுவான சிஆர்பிஎஃப்

3.25 லட்சம் பணியாளர்கள் வலுவான சிஆர்பிஎஃப் நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ சக்தியாகும், இது நாட்டின் முன்னணி உள் பாதுகாப்பு படையாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவருக்கும் கொரோனா வைரஸ்

மூவருக்கும் கொரோனா வைரஸ்

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் கொரோனா வைரஸ் பரவியதை பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது அன்றாட நிகழ்வை ட்ராக் எடுக்கப்பட்ட ஹிஸ்டரியின் மூலம் வெளியான தகவலின் படி, மூவரும் ஒரே நாளில் ஒரு ஏடிஎம்மை உபயோகித்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்‌ஷன்!சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்‌ஷன்!

மூவரும் பயன்படுத்திய ஏடிஎம் சீல்

மூவரும் பயன்படுத்திய ஏடிஎம் சீல்

இதையடுத்து உடனடியாக மூவரும் பயன்படுத்திய ஏடிஎம் சீல் செய்யப்பட்டு கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த ஏடிஎம்மை பயன்படுத்திய பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தகவல்களை அளித்துள்ளனர்.

பொதுமக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்

பொதுமக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்

அதேபோல் பரோடா நகர அதிகாரிகள் பொதுமக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்களையும் தனிமைபடுத்தி வைத்துள்ளனர்.

source: indiatvnews.com

Best Mobiles in India

English summary
corona spread from ATM., 3 army personnel test positive

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X