நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: whatsapp, facebook வதந்திக்கு முற்றுப்புள்ளி- வேணாம்யா., போதும்யா!

|

சிக்கன், முட்டை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து வதந்திகள் பரவி வருவதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலம் பரவுவதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. தற்போதுவரை சிக்கன் மூலம் கொரோனா பரவுவதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் பதிவாகவில்லை.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா, இந்த வைரஸ் நாடு முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறப்பு விகிதமும் படிப்படியாக  குறைகிறது

இறப்பு விகிதமும் படிப்படியாக குறைகிறது

சீனாவில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவுவது குறைந்து கொண்டே வருவதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆந்திரா செல்போன் திருட்டு டிரைனிங் சென்டர்., 4 வருஷம் அனுபவம்., திருடர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த நிலைியல் சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர். இதையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்து இருப்பதாக சமீபத்திய தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.

பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் அச்சம்

பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் அச்சம்

ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 78 ஆயிரத்து 500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 433 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் பல்வேறு நாடுகளிலும் பரவி கிடக்கிறது.

நாமக்கல் சென்றிருந்த முதலமைச்சர்

நாமக்கல் சென்றிருந்த முதலமைச்சர்

இந்த நிலையில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கரின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கேபிபி பாஸ்கரின் குடும்பதாருக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் வந்து, அவர்களது குடும்பத்தாரை சந்தித்தார்.

முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனு

முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனு

அப்போது நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் இணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

சுமார் 250 கோடி வரை நஷ்டம்

சுமார் 250 கோடி வரை நஷ்டம்

அதில் கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவிய வதந்தியால் இதுவரை சுமார் 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம்

முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம்

அதேபோல் இந்த நஷ்டத்தினை ஈடுகட்டும் வகையில் விரைவில் சிக்கன் மேளா ஒன்று நடத்த திட்டமிட்டுருப்பதாக தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகள்

சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகள்

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் வழக்கம் போல் பல்வேறு வகையான வதந்திகளும் பரவி வருகிறது. கோழிக் கறி மூலம் கொரோனா பரவுகிறது எனவும் சாலையில் திரியும் நாய்கள் மூலம் கொரோனா பரவுகிறது என பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது.

கோழிக்கறியே கொரோனாவிற்கு காரணம்

கோழிக்கறியே கொரோனாவிற்கு காரணம்

இருப்பினும் கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டை மூலமாகவே பரவுவதாக வதந்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. கோழிக் கறியே கொரோனாவிற்கு காரணம் என்ற அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லாவிட்டாலும் வதந்திகள் மட்டுமே பரவிவருகிறது.

அவசர ஆலோசனைக் கூட்டம்

அவசர ஆலோசனைக் கூட்டம்

இந்த நிலையில் நாமக்கலில் கோழிப்பண்ணையாளர்களின் அவசர ஆலோசனைகக் கூட்டம் நடைபெற்றது. கோடிக்கணக்கில் முட்டைகள் தேங்கியுள்ளதாகவும் அதை எப்படி விற்பனை செய்வது உள்ளிட்டவைகளும் இதற்கு எந்த மாதிரியான உதவிகளை பெறுவது போன்ற விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கோழி, முட்டை மூலம் வாரம் 23 கோடி வரை நஷ்டம்

கோழி, முட்டை மூலம் வாரம் 23 கோடி வரை நஷ்டம்

வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவிய கொரோனா வதந்தியால் கோழிக்கறி விற்பனையில் 15 கோடி ரூபாய் வரையிலும், முட்டை விற்பனையில் 8 கோடி வரையிலும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

jio vs vodafone: தினசரி 3 ஜிபி டேட்டா அதே விலையில்., நேருக்கு நேர் மோதும் திட்டங்கள்- எது சிறந்தது?

முட்டை கோழி பண்ணையாளர்கள் வருத்தம்

முட்டை கோழி பண்ணையாளர்கள் வருத்தம்

இதனால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக நாமக்கல் கோழி விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக வதந்திகள் பரப்புவதாலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் வர்த்தக சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

1 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்

1 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்

அதேபோல் வதந்திகளை கட்டுப்படுத்த முடியாமல், சிக்கன், முட்டை சாப்பிடுங்கள், கொரோனா வரவே வராது. அப்படி மீறி வந்தா ரூ 1 கோடி பரிசாக தருகிறோம் என தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Corona rumours continuously spread in socialmedia: huge loss due to fall prices of chicken, egg

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X