ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்!
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கொரோனா மானிட்டரிங் ஆப் சென்னை பெருநகர் மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்
அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவாமல் இருக்க தமிழக அரசு, மாநகராட்சி, மருத்துவர்கள், ஊடகத்தினர்கள் சார்பில் பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு செயலியை உருவாக்கி இருக்கின்றனர்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் செல்போனை உபயோகிக்கும்படி ஒரு செயலியை உருவாக்கி இருக்கின்றனர். மேலும் இந்த செயலி குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த செயலி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதை பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும்
இந்த செயலியானது பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும். அதில் சென்று கொரோனா மானிட்டரிங் என்பதை கிளிக் செய்து செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரவிக்கப்படுகிறது. மேலும் இந்த செயலியானது சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அச்சம் இருக்கிறதா
சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரோனா இருக்கிறதா என அச்சம் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ இந்த செயலி மூலம் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். பின் வீடு தேடி மருத்துவத் துறை சேர்ந்த ஒருவர் வந்து சோதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த மாதிரியை சோதனை
வீட்டிற்கு வரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர் ரத்த மாதிரியை சோதனை செய்து கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என தெரிவிப்பார். இந்த செயலியானது கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு கொரோனா அச்சத்தை போக்கவும் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications