Google-ல் அதிகம் தேடப்பட்டவை: சும்மாவே இருந்தா இப்படிதான் யோசிக்கத் தோனும்!

|

கொரோனா ஊரடங்கு உத்தரவையடுத்து மக்கள் வீட்டிலேயே உள்ளனர். இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரிப்பு

அதேபோல் இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர்

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர்

மேலும் மாநிலங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலும் முதல்முறையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன.

கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் 1075 பேருக்கும், டெல்லியில் 1154 பேருக்கும், ராஜஸ்தானில் 804 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 564 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 483 பேருக்கும், தெலுங்கானாவில் 504 பேருக்கும், கேரளாவில் 376 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூகுளில் கடந்த மூன்று வாரங்களில் அதிக தேடியவை

கூகுளில் கடந்த மூன்று வாரங்களில் அதிக தேடியவை

இந்த மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல் மொபைல் போனில் இணையதளத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி கூகுளில் கடந்த மூன்று வாரங்களில் அதிக தேடியவை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

கொரோனா டிப்ஸ் என 10 மில்லியன் பேர் தேடியுள்ளனர்

கொரோனா டிப்ஸ் என 10 மில்லியன் பேர் தேடியுள்ளனர்

கொரோனா டிப்ஸ் என 10 மில்லியன் பேர் தேடியுள்ளனர். கொரோனா வைரஸ் என 5 மில்லியன் பேர் தேடியுள்ளனர். லாக்டவுன் எக்ஸ்டென்ஸன் என1 மில்லியன் நபர்கள் தேடியுள்ளனர். கோவிட் 19 என 7 லட்சம் பேர் தேடியுள்ளனர்.

ஹைட்ராக்ஸி க்ளோரோ குயின் என 6 லட்சம் பேர்

ஹைட்ராக்ஸி க்ளோரோ குயின் என 6 லட்சம் பேர்

அதேபோல் ஹைட்ராக்ஸி க்ளோரோ குயின் என 6 லட்சம் பேர் தேடியுள்ளனர், இது கொரோனா தடுப்பூசி மருந்தாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் சிம்ப்டம்ஸ் என 5 லட்சம் பேர் தேடியுள்ளனர், கொரோனா தொற்று அறிகுறி என்பதன் இதன் பொருளாகும்.

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆரோக்ய சேது ஆப்

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆரோக்ய சேது ஆப்

அதேபோல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆரோக்ய சேது ஆப் எந 3.2 லட்சம் பேர் தேடியுள்ளனர். லாக்டவுன் என 2 லட்சம் பேரும், இந்தியா கோவிட் 19 என 1.2 லட்சம் பேரும், ஆரோக்ய சேது ஆப் பதிவிறக்கம் என 1 லட்சம் பேரும், இந்தியா லாக்டவுன் என 1 லட்சம் பேரும் தேடியுள்ளனர்.

ஊரடங்கு தொடர்பாகவும் அதிகளவில் தேடப்பட்டுள்ளது

ஊரடங்கு தொடர்பாகவும் அதிகளவில் தேடப்பட்டுள்ளது

தொடர்ச்சியாக லேட்டஸ்ட் கொரோனா வைரஸ் நியூஸ் என 30 ஆயிரம் பேரும், கொரோனா வைரஸ் ட்ரீட்மென்ட் என 20 ஆயிரம் பேரும் தேடியுள்ளனர். இதையடுத்து கடந்த மூன்று வாரங்களாகவே கொரோனா தொடர்பாகவும் இந்தியாவில் லாக்டவுன்(ஊரடங்கு) தொடர்பாகவுமே அதிகளவில் தேடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Corona lockdown: these are the most things searched by india in google

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X