கொரோனா ஊரடங்கு: பொதுமக்கள் எதில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள் தெரியுமா?- இதோ ஆய்வு

|

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் எதில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள் என்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது

இந்தியாவில் ஊடுருவிய கொரோனா ஊரடங்கு உத்தரவின் மூலம் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கான மாற்றுமருந்து என்ன என்று உலக நாடுகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் நிலையில் கேரள அரசு புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது என்று அறிவித்துள்ளது.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு

6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் 6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 199 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவாமல் தடுக்க அதிகளவில் சோதனை

பரவாமல் தடுக்க அதிகளவில் சோதனை

கொரோனா வைரஸை பரவாமல் போராட, அதிகளவில் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கொரோனா பரிசோதனைகளை வேகமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு

இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சில்

ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சில்

இதுதொடர்பாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சில் (பார்க்) மற்றும் நீல்சன் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. ஊரடங்கு காலத்தில் இந்திய மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதில்தான் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியர்கள் 1.27 டிரில்லியன் நிமிடங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் தொலைக்காட்சி பார்த்த அதிக நேரம் இதுதான்

ஒரே வாரத்தில் தொலைக்காட்சி பார்த்த அதிக நேரம் இதுதான்

இதுவரை ஒரே வாரத்தில் தொலைக்காட்சி பார்த்த அதிக நேரம் இதுதான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமான சேனல்களை மாற்றி மாற்றி பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சராசரியாக ஒருவர் மட்டும் 23 சேனல்களை பார்ப்பதாக புள்ளிவிவரம்

சராசரியாக ஒருவர் மட்டும் 23 சேனல்களை பார்ப்பதாக புள்ளிவிவரம்

அதில் சராசரியாக ஒருவர் மட்டும் 23 சேனல்களை பார்ப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மீண்டும் அதிகாலையிலேயே அதாவது அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில் இருந்தே தொலைக்காட்சி பார்க்க தொடங்குகின்றனர். கடந்த வாரம் திரைப்படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்ட புகைப்படம்,இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!நாசா வெளியிட்ட புகைப்படம்,இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

பிரைம் டைம் பார்வையாளர்கள்

பிரைம் டைம் பார்வையாளர்கள்

இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் பிரைம் டைம் பார்வையாளர்கள் 11 சதவீதமும், பிரைம் டைம் அல்லாத நேரத்தில் பார்வையாளர்கள் 81 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் பலர் நள்ளிரவுக்கு பிறகும் அதாவது இரவு 1 மணி முதல் 2 மணி வரை தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Corona lockdown: public spends most of their time with

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X