ஊரடங்குல உங்களுக்கு தான் வாழ்வு: Netflix உச்சக்கட்ட லாபம்., எவ்வளவு எதற்கு தெரியுமா?

|

நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு வருமானம் பார்த்துள்ளது. உலக அளவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

நெட்பிளிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்தியது

நெட்பிளிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்தியது

நெட்பிளிக்ஸ் நிறுவனம் எப்போதுமே அதன் சேவைகளை வழங்க மாதாந்திர சந்தா கட்டணத்தை பல சலுகையோடு வழங்கினால் அந்த வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் கவனமாக செயல்படும். சமீபத்தில் நெட்பிலிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்திய நிலையில், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இது இரண்டும் உலகளவில் 50மில்லியனுக்கும் அதிகமான கட்டண பயனர்களை ஈர்த்துள்ளது.

ஆசரியர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தல்

ஆசரியர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தல்

மேலும் ஆவணப்படங்களை அணுகுவதற்கான ஆசரியர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தல் என்ற தலைப்பின் கீழ் பல ஆண்டுகளாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆசிரியர்களை தங்கள் வகுப்பறைகளில் ஆவணப்படங்களை திரையிட அனுமதித்துள்ளது,ஆனாலும் பள்ளிகள் மூடப்பட்டதால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?

அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்

அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்

ஸ்மார்ட் போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து தங்களது நேரத்தை பெரும்பாலானோர் செல்போனில் செலவிட்டு வருகின்றனர்.

OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கு

OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கு

தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. இதில் நெட்பிளிக்ஸ் சீரஸ் என்றே தனி பட்டாளம் உள்ளது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த நிலையானது நெட்பிளிக்ஸ் அதன் சந்தாதாரர்களை அதிகரிக்க உதவும் வகையாக இருந்துள்ளது . நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

709 மில்லியன் டாலர் வருமானம்

709 மில்லியன் டாலர் வருமானம்

அதேபோல் கடந்த மூன்றே மாதங்கள் அதாவது கடந்த காலாண்டு முடிவு(கொரோனா தொற்றினால் ஆங்காங்கே மக்கள் வீட்டுக்குள் தேங்கிய மாதங்கள்) இந்த மாதங்களில் மட்டும் 709 மில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 சதவீதம் உயர்ந்துள்ளது

28 சதவீதம் உயர்ந்துள்ளது

இந்த வருமானது கடந்த ஆண்டை விட இரண்டு அதிகம் என்பதும் இதன்மூலம் நெட்பிளிக்ஸின் ஒட்டுமொத்த வருமானம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

BSNL அதிரடி சலுகை:ரூ.399-க்கு மேல் உள்ள திட்டங்களுக்கு ரூ.999 மதிப்புள்ள சலுகை!BSNL அதிரடி சலுகை:ரூ.399-க்கு மேல் உள்ள திட்டங்களுக்கு ரூ.999 மதிப்புள்ள சலுகை!

'Tiger king' என்ற டாக்குமெண்டரி

'Tiger king' என்ற டாக்குமெண்டரி

கொரோனா ஊரடங்காலம் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது எனவும் இதனால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியஸ் மற்றும் சினிமா பார்ப்பதில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக 'Tiger king' என்ற டாக்குமெண்டரி, 'Love is Blind' என்ற ரியாலிட்டி ஷோ மற்றும் 'Money Heist' என்ற திரில்லர் சீரியஸ் தொடர்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: vox.com

Best Mobiles in India

English summary
Corona lockdown: Netflix has 183 million customers around the world

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X