Home
News

Coronalockdown: ஆன்லைன் விளையாட்டில் மனைவி தொடர் வெற்றி., முதுகு எலும்பை உடைத்த கணவர்!

ஆன்லைனில் விளையாட்டில் மனைவி தொடர் வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் முதுகு எலும்பை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். தங்களது பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர். ​​இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே, பப்ஜி, கால் ஆஃப் டூட்டி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் புதிய விளையாட்டுகளும் பிரபலமாக உள்ளன. பெரும்பாலான விளையாட்டுகள் ஒற்றை வீரர், மல்டிபிளேயர் மற்றும் ஆன்லைன் என்ற முறையிலேயே இயங்குகிறது.

லுடோ கிங் விளையாட்டு

லுடோ கிங் விளையாட்டு

மிக வேகமாக பிரபலமான லுடோ கிங் விளையாட்டு லாக் டவுனின் போது பெரும் தேவையைக் கண்டுள்ளது. பெரியவர்களுக்கும் இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது தெரியும், மேலும் எல்லா வயதினரையும் ஈர்ப்பதில் இந்த விளையாட்டு பிரதானமாக இருந்து வருகிறது. ஒற்றை வீரர், மல்டிபிளேயர் மற்றும் ஆன்லைன் பிளேயர்களுடன் விளையாடுவதற்கான விருப்பங்கள் உள்ளன.

தம்பதியினர் விளையாடியுள்ளனர்

தம்பதியினர் விளையாடியுள்ளனர்

இந்த நிலையில் இந்த லுடோ கிங் விளையாட்டை இரு தம்பதியினர் விளையாடியுள்ளனர். இதில் மனைவி தொடர்ந்து வெற்றிப் பெற்றதன் காரணமாக கணவர் மனைவியை ஆக்கிரோசமாக அடித்துள்ளார் அதில் அவரது முதுகு எழும்பு முறிந்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டான லுடோ

ஆன்லைன் விளையாட்டான லுடோ

ஆன்லைன் விளையாட்டான லுடோவில் தொடர்ந்து அவரது மனைவி வெற்றி பெற்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் தனது மனைவியின் முதுகெலும்பை உடைத்துள்ளார். இந்த சம்வமானது குஜராத்தின் வமோதராவில் உள்ள வாமலியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் லுடோ விளையாடு

ஆன்லைனில் லுடோ விளையாடு

ஆரம்பக்கட்டத்தில் அவரது மனைவி ஆன்லைனில் லுடோ விளையாட்டை விளையாட கற்றுக் கொடுத்துள்ளார். பின் ஊரடங்கினால் இருவரும் வீட்டிலேயே இருந்ததால் இந்த விளையாட்டை இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர். இந்த விளையாட்டில் ஆரம்பத்தில் இருந்த மனைவியே வெற்றிப் பெற்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் மனைவியிடும் சத்தம் போட தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து மனைவியே வென்றுள்ளார்

தொடர்ந்து மனைவியே வென்றுள்ளார்

தொடர்ந்து மனைவியே வென்றுவர, கோபமடைந்த கணவர் மனைவியின் முதுகில் வேகமாக அடித்துள்ளார். இதையடுத்து மனைவி வலியால் துடித்துள்ளார். அதன்பேரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு எலும்பு முறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒற்றுமையாக வாழும்படி அறிவுரை

ஒற்றுமையாக வாழும்படி அறிவுரை

இதுகுறித்து மனைவி புகார் அளிக்காததன் காரணமாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் கணவருக்கு அறிவுரை கூறி இருவரையும் ஒற்றுமையாக வாழும்படி கூறினர். அதோடு மனைவியை சில நாட்களுக்கு அவரது தாய் வீட்டில் தங்கும்படி அறிவுருத்தி சென்றனர்.

Best Mobiles in India

English summary
Corona lockdown: man broke wife spine for the reason of defeat him in ludo game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X