கொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா?

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரிப்பு

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது

266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்டோர் மொத்தம் 3,373 பேரில் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்

9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்

அதில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களில் 9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 விழுக்காட்டினர் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் எனவும் தெரிவித்தார்.

33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்

33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்

அதேபோல் குறிப்பாக 33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவென்றால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் 17 விழுக்காட்டினர் எனவும் கூறினார்.

இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

அதேபோல் கொரோனா பரவாமல் தடுக்க பிரதமர் மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள் ஒன்றுக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

நாள் ஒன்றுக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 2 மாதங்களில் அந்நிறுவனத்துக்கு சுமார் 48 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் அமைப்பின் மூலம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

ஏறக்குறைய கடந்த 2 மாதங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 19,000 கோடி டாலர் குறைந்ததால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்திலிருந்து 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Corona impact- Mukesh ambani's drops 28% net worth: indias wealthiest peoplesface falldown

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X