ஒரு டிரிப் போவோமா: பஸ்ஸை விட காசு கம்மி., பிளைட் டிக்கெட் விலை வீழ்ச்சி- எவ்வளவு தெரியுமா!

|

கொரோனா அச்சம் காரணமாக தேவையற்ற பயணத்தை ரத்து செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் குறைந்து வரும் நிலையில் பிளைட் டிக்கெட் விலை வெகுவாக குறைந்துள்ளது.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

புதியரக ஹெல்மெட்

புதியரக ஹெல்மெட்

புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் சீனாவில் புதிய ரக ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம்

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம்

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்கிறதா ஒருவருக்கு போன் செய்ததும் ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்டால் அச்சம் கொள்ள வேண்டாம். பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும்.

பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள்

பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள்

கொரோனா பாதிக்காமல் இருக்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் காலர் டியூனில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கை மூலம் எந்த நெட்வொர்க்கில் இருந்து அழைப்பை மேற்கொள்வோரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என கருதப்படுகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்

அதேபோல் வழக்கமாக மக்கள் கூட்டத்தோடு காணப்படும் இடங்கள் தற்போது வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி, சபரிமலை போன்ற கோவில்களுக்கு வர வேண்டாம் என தேவஸ்தான போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

வெறிச்சோடி காணப்படும் இடங்கள்

வெறிச்சோடி காணப்படும் இடங்கள்

அதேபோல் பெரும்பாலான தியேட்டர்களும் வெறிச்சோடிய நிலையிலேயே உள்ளது. மேலும் தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என அரசு அறிவுருத்தி உள்ளது. குறிப்பாக விமான பயணத்தை தவிர்க்குமாறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

குறைந்தது பிளைட் டிக்கெட் விலை

குறைந்தது பிளைட் டிக்கெட் விலை

பொதுவாக பிளைட் டிக்கெட் விலை அனைவருக்கும் தெரிந்ததே, அதுவும் அன்றே புக் செய்தோம் என்றால் டிக்கெட் மிக அதிகமாகவே இருக்கும் குறிப்பாக டெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விலை அதிகரித்து காணப்படும். ஆனால் இப்போது டிக்கெட் விலை வெகுவாக குறைந்துள்ளது.

ரூ.12000-க்கு சரிந்த பிளைட் டிக்கெட்

ரூ.12000-க்கு சரிந்த பிளைட் டிக்கெட்

இதையடுத்து சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1200 ஆகவும், டெல்லி விமான கட்டணம் ரூ.3000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் விலையோடு ஒப்பிடுகையில் சில பேருந்து கட்டணமே அதிகமாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Corona effects airlines reduced ticket prices for domestic flights

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X