நாங்களும் ஏற்படுத்துவோம் விழிப்புணர்வு: வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அட்டகாச அம்சம்!

|

சமூகவலைதள பயன்பாடு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் ஏதேனும் ஒரு சமூகவலைதளத்தில் கணக்கு வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப்

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப்

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஆகும். இதில் வாட்ஸ்அப் கணக்கை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

பயனர்களை ஈர்க்கும் அம்சம்

பயனர்களை ஈர்க்கும் அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களை ஈர்ப்பதற்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது. பயனர்கள் சேட்டிங் பயன்பாட்டை உபயோகிக்கும்போது பெரிதளவு பயன்படுத்தப்படும் அம்சம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஆகும். வாட்ஸ்அப் சேட்டிங்கில்., ஸ்டிக்கர் அம்சத்தில் அனைவருக்கும் தடுப்பூசி என்று அழைக்கப்படும் புதிய ஸ்டிக்கர் பேக்கை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

என்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்!என்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்!

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள ஸ்டிக்கர் அம்சம்

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள ஸ்டிக்கர் அம்சம்

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்டிக்கர் அம்சத்தை பயனர்கள் இப்போதே பயன்படுத்தலாம். இந்த அம்சம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கோவிட்-19 தடுப்பூசி கிடைப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகிழ்ச்சி, நிவாரணம் நம்பிக்கைத்தன்மை வளர்க்கும் விதமாகவும், கொரோனா சமயத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களை பாராட்டும் விதமாகவும் கோவிட்-19 ஸ்டிக்கர் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு உடன் இணைந்து உருவாக்கம்

உலக சுகாதார அமைப்பு உடன் இணைந்து உருவாக்கம்

வாட்ஸ்அப் நிறுவனம் உலக சுகாதார அமைப்பு உடன் இணைந்து ஸ்டிக்கர்களை உருவாக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் கூடுதலாக ஒரு அம்சத்தை பதிவு செய்திருக்கிறது. கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை விளக்கும் வகையிலும், கொரோனா அழைப்புதவி அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கிறது.

புதிய ஸ்டிக்கர் பேக்

புதிய ஸ்டிக்கர் பேக்

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ஸ்டிக்கர் பேக் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டிக்கர்களை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகள் உலகெங்கிலும் வெளியிடப்பட்டு வருவதால் அதை போடுவதற்கு புதிய ஸ்டிக்கர் பேக் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கோவிட்-19 தடுப்பூசிகள் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என கருதப்பட்டாலும், தற்போதைக்கு தொடர்ந்து முகமூடி அணிய வேண்டும், உடல் ரீதியாக சமூகஇடைவெளி கடைபிடிக்க வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும், கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி என உருவாக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்

அனைவருக்கும் தடுப்பூசி என உருவாக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்

கோவிட்-19 குறித்து சரிபார்க்கப்பட்ட தகவல்களை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடனும், உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் வாட்ஸ்அப்பில் உருவாக்கப்பட்ட கோவிட்-19 ஹெல்ப்லைன்களும் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள் மற்றும் பதிவுகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி என உருவாக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் பேக் 23 குறிப்பிட்ட ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்த மகிழ்ச்சியையும், நிவாரணத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த மக்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Corona Awareness: Whats App Launches its New Stickers About Corona Vaccines

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X