200 பெண்களை ஏமாற்றிய திருநாவுக்கரசு மாட்டியது எப்படி தெரியுமா?

  |

  இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசுவை போலீசார் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

  தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு உட்பட 5 பேரை போலீசார் கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  200 பெண்களை மிரட்டி ஆபாசப் படம்

  பொள்ளாச்சியில் சுமார் 200 பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

  மொபைல் இல் இருந்த வீடியோகள்

  கைதுசெய்யப்பட்ட சபரி, சதீஷ் மற்றும் வசந்த் குமாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் 40 பெண்களின் ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் இருந்த வீடியோ பதிவுகளைக் காட்டியே இவர்கள் பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இன்னும் பலர் சிக்கக் கூடும்

  இவர்களுடன் சேர்த்து இன்னும் சில வீடியோ பதிவுகளில் இவர்களுடன் இருந்த இரண்டு போரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் இன்னும் பலர் சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு

  தலைமறைவாக இருந்து காவல்துறையினர் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு மூலம் மிரட்டி வந்த திருநாவுக்கரசை கவலைதருணியினர் எப்படி கைது செய்தனர் என்பதைப் பற்றிக் காவல் துறை அதிகாரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  மொபைல் நெட்வொர்க் டிராக்கிங்

  திருப்பத்தில் தலைமறைவாகி இருந்த திருநாவுக்கரசின் மொபைல் நெட்வொர்க்கை காவல்துறையினர் டிரேஸ் செய்து வந்தனர், நேற்று இரவு மாக்கினாம்பட்டி அருகே உள்ள அவரின் வீட்டருகில் கடைசியாக அவரின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை திருநாவுக்கரசு சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.

  நடந்தது என்ன?

  பொள்ளாச்சி: பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பேசி பழகி, நேரில் வரச்சொல்லி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த பேஸ்புக் நண்பன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

  பேஸ்புக் நண்பன்

  பொள்ளாச்சியில் உள்ள ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரி என்கிற ரிஷ்வந்த் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வருகிறான், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் இல் நண்பராகப் பழகி வந்துள்ளான்.

  போனில் தொடர்பு

  சபரி சென்ற வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் சபரி. கடந்த 12 ஆம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான்.

  காரில் பெண்ணை கடத்திய நண்பர்கள்

  வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த சபரி, மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

  பாலியல் தொந்தரவு

  மொபைல் போனில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி மாணவியைமிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

  மாணவியின் நகை பறிப்பு

  காரில் கூச்சலிடத் துவங்கிய மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே உள்ள சாலையில் இறக்கி விட்டு, அவரிடமிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர்.

  காவல்நிலையத்தில் புகார்

  தாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து இவர்களின் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  காருடன் கைது

  இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை, மூவரையும் ஒன்றாகப் பிடிக்கத் திட்டமிட்டுக் காத்திருந்து, சபரி, வசந்த்குமார், சதீஸ்குமார் ஆகிய மூவரையும் ஜோதிநகர் பகுதியில் காவல்துறையினர் கருடன் கைது செய்துள்ளனர், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர்.

  200 ஆபாச வீடியோக்கள்

  கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து இது வரை 200 பெண்களின் வீடியோகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகியிருக்கும் இந்த தகவல் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்துள்ள கும்பல்

  கல்லூரியில் படிக்கும் பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் நிறையப் பெண்களை இந்த கும்பல் மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களைக் குறிவைத்து இயங்கி வந்துள்ளது.

  பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்கள்

  பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்களை மட்டும் இந்த கும்பல் குறிவைத்து மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பழகி, நட்பில் துவங்கி காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கி வந்துள்ளனர்.

  மக்கள் போராட்டம்

  கைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் அதிமுக பிரமுகருக்கு வேண்டப்பட்டவர் என்பதால் காவல்துறை இந்த வழக்கை மூடி மறைக்கப் பார்ப்பதாகப் பொள்ளாச்சி மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  அதிமுக எம்.பி மகேந்திரன்

  குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்படுவதாக, பொள்ளாச்சியில் தவறான வதந்தி பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி அதிமுக எம்.பி மகேந்திரன், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்களுக்கு தூக்குத் தண்டை வழங்க வலியுறுத்தியும் நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகராளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  யார் குற்றம் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

  யார் குற்றம் செய்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்காது என்று பொள்ளாச்சி அதிமுக எம்.பி மகேந்திரன் தெரிவித்துள்ளார். தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைப் பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  திருநாவுக்கரசு கைது

  திருநாவுக்கரசை தேடி வருகின்றனர் தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைக் கைது செய்த பிறகு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். திருநாவுக்கரசைப் பொள்ளாச்சி காவல்துறை பல இடங்களில் மும்முரமாக தேடி வந்தது. தற்பொழுது அவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Cops finally arrest kingpin in Pollachi sex abuse case : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more