Home
News

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன், நம்ம ஊரில் நிலைக்குமா??

By Meganathan

கூல்பேட் நிறுவனம் மெகா 2.5டி எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் இந்தக் கருவி பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. அதன்படி ஆகஸ்டு 24 ஆம் தேதி மதியம் 02.00 மணிக்கு இதன் விற்பனை துவங்குகின்றது. பிளாஷ் விற்பனைக்கான முன்பதிவுகள் இன்று (10/08/2016) மாலை 05.00 மணிக்குத் துவங்குகின்றது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இந்தக் கருவி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தக் கருவி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூல்பேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்டிருக்கும் கூல்பேட் மெகா 2.5டி ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த CoolUI 8.0 கொண்டிருக்கின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.5 டி வளைந்த கிளாஸ் கொண்டிருக்கின்றது. 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6735P பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

செல்பீ

செல்பீ

செல்பீ சார்ந்த ஸ்மார்ட்போன் என்பதால் 8 எம்பி கேமரா, மற்றும் இதர கேமரா சென்சார்கள் இரு பக்க கேமராக்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, வோல்டிஇ, வை-பை, ப்ளூடூத், போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

கூல்பேட் மெகா 2.5டி கருவியானது 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த பேட்டரி மூலம் 9 மணி நேர டாக்டைம், 200 மணி நேர ஸ்டான்ட்பை டைம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இந்தியாவில் கூல்பேட் மெகா 2.5டி கருவியின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவி சீனாவில் வெளியிடப்பட்ட கூல்பேட் ஸ்கை 3 போன்றே காட்சியளிக்கின்றது.

Best Mobiles in India

English summary
Coolpad Launched Selfie Focused Smartphone at Rs. 6,999 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X