Home
News

ஷூ 'பாடும்' பாட்டு, டாய்லெட்டில் 'மணக்கும்' இசை..!

அமெரிக்க மார்க்கெட்ல முதல் முதல்ல அறிமுகம் செய்யப்பட்ட எம்பி3 (MP3) ப்ளேயரோட மெமரி எவ்வளவுனு தெரியுமா - 32 எம்பி (32 MB)..! அடுத்தகட்டமாக வெளிவந்த எம்பி3-யின் மெமரி 64 எம்பி..!

இசை வெறியர்களுக்கு இது சமர்ப்பணம்..!

அப்படி ஆரம்பித்த எம்பி3-யின் வரலாறு ஏனைய தொழில்நுட்ப கருவிகளைப் போலவே உச்சத்தை அடைந்தும், வித்தியாசம், அதி நவீனம், அதிக விலை, வளர்ச்சி என்று மேலே போய் கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்ன வித்தியாசம்..? என்ன வளர்ச்சி..? - என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

கோட் எம் (Code M) :

கோட் எம் (Code M) :

இது வெறும் ஷூ மட்டுமில்லை. இதனுள் பில்ட்-இன் எம்பி3 ப்ளேயர் ஒன்றும் உள்ளது..!

ரூபிக்'ஸ் க்யூப் எம்பி3 ப்ளேயர் :

ரூபிக்'ஸ் க்யூப் எம்பி3 ப்ளேயர் :

என்னடா இந்த ரூபிக் க்யூப்ல ரெண்டே ரெண்டு கலர் தான் இருக்குனு யோசிக்காதீங்க.. இது ஒரு எம்பி3 ப்ளேயர்..! இதன் ஒவ்வொரு 'க்யூப்'பும் பட்டன்கள் ஆகும்..!

கேசட் எம்பி3 ப்ளேயர் :

கேசட் எம்பி3 ப்ளேயர் :

வழக்கமாக 'கேசட்' போட்டு தான் பாட்டு கேட்போம். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று கேசட்டில்லேயே பாட்டு கேட்கும்படி வடிவமைக்கப்பட்ட எம்பி3 ப்ளேயர்..!

டாய்லெட் எம்பி3 ப்ளேயர் :

டாய்லெட் எம்பி3 ப்ளேயர் :

இது கொஞ்சம் ஓவர் தான். ஆனாலும் பாட்டு கேட்க நல்ல இடம் தான், அதான் 'அங்கயும்' வைக்குற மாதிரி ஒரு எம்பி3 ப்ளேயர் செஞ்சுட்டாங்க..!

லேகோ எம்பி3 ப்ளேயர் :

லேகோ எம்பி3 ப்ளேயர் :

சிலருக்கு கலர் மாத்திரை போல தெரியும், சிலருக்கு குழந்தைகள் விளையாடும் பொம்மை போல தெரியும் இது - நிஜத்தில் ஒரு எம்பி3 ப்ளேயர் ஆகும்..!

எம்பி3 கிராஸ் :

எம்பி3 கிராஸ் :

கழுத்தில் போட்டுக் கொள்ளும் சிலுவை போல காட்சியளிக்கும் இது ஒரு எம்பி3 ப்ளேயர் ஆகும்..!

ஸ்விஸ் ஆர்மி நைஃப் (Knife) எம்பி3 ப்ளேயர் :

ஸ்விஸ் ஆர்மி நைஃப் (Knife) எம்பி3 ப்ளேயர் :

பிரபல ஸ்விஸ் ராணுவ கத்தி போல வடிவமைக்கப்பட்டிருக்கும் எம்பி3 ப்ளேயர்..!

கலர் சோனிக் எம்பி3 ப்ளேயர் :

கலர் சோனிக் எம்பி3 ப்ளேயர் :

உங்கள் மனநிலைக்கு ஏற்றது போல இசை கேட்டுக் கொள்ளும்படி 'தெளிவாக' உருவாக்கப்பட்ட எம்பி3 ப்ளேயர் டிசைன்..!

 பெல்ட் பக்குள் எம்பி3 ப்ளேயர் :

பெல்ட் பக்குள் எம்பி3 ப்ளேயர் :

இதை அணிந்து கொண்டால் நீங்கள் ஒரு நடமாடும் இசை மனிதனாய் ஆகி விடலாம்..! இது ஒரு முழு பெல்ட் இல்லை வெறும் 'பக்குள்' (Buckle) மட்டும்ன் தான் என்பது குறிப்பிடத்தக்கது..!

பெஸ் (Pez) எம்பி3 ப்ளேயர் :

பெஸ் (Pez) எம்பி3 ப்ளேயர் :

சிறுபிள்ளைத் தனமான ஐடியா தான். மிட்டாய் போல காட்சியளிக்கும் இது AAA சைஸ் பேட்டரியில் இயங்க கூடியது..!

ஐகூல் சென்டட் (iCool scented) எம்பி3 ப்ளேயர் :

ஐகூல் சென்டட் (iCool scented) எம்பி3 ப்ளேயர் :

சாக்லேட், ரோஸ், ஸ்ட்ராபெர்ரி, லெமன் போன்ற வாசனைகளை கொண்ட எம்பி3 ப்ளேயர்..!

லவ்வர்ஸ் எம்பி3 ப்ளேயர் :

லவ்வர்ஸ் எம்பி3 ப்ளேயர் :

இதை பற்றிய விளக்கமே தேவை இல்லை. பார்க்கும் போதே நன்றாக புரிந்திருக்கும் - 'எல்லாம் காதல் மயம் என்று இசைக்கும்' எம்பி3 ப்ளேயர்..!

Best Mobiles in India

English summary
Check out here some Coolest MP3 Players.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X