Home
News

லாலிபாப் அப்டேட் செய்தாச்சா, அப்ப இதை எல்லாம் ட்ரை பன்னுங்க பாஸ்..

ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோருக்கு லாலிபாப் அப்டேட் வழங்கப்பட்டு விட்ட நிலையில் நீங்களும் புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்திருக்கின்றீர்களா, அப்படியானால் புதிய லாலிபாப் அப்டேட்டில் கூகுள் வழங்கியிருக்கும் புதிய அம்சங்களை பற்றி கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ட்ரஸ்ட்டெட் ப்ளூடூத் டிவைஸ்

ட்ரஸ்ட்டெட் ப்ளூடூத் டிவைஸ்

லாலிபாப் அப்டேட் கொண்ட ஸ்மார்ட்போனில் இந்த அம்சத்தை ஆன் செய்ய கருவியின் செட்டிங்ஸ் சென்று செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ஸ்மார்ட் லாக் சென்று ட்ரஸ்ட்டெட் டிவைசஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷனை பயன்படுத்த போனில் ஸ்வைப் அன்லாக் அம்சம் இருக்க கூடாது.

ஃபேஸ் லாக் அம்சம்

ஃபேஸ் லாக் அம்சம்

இதை செட் செய்ய செட்டிங்ஸ் பகுதியில் செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்மார்ட் லாக் ஆப்ஷனில் ட்ரஸ்ட்டெட் ஃபேஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வாய்ஸ் கமான்டு சிஸ்டம்

வாய்ஸ் கமான்டு சிஸ்டம்

உங்களது கருவியில் இந்த அம்சம் வேலை செய்தால் அந்த கருவியின் டிஸ்ப்ளே ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாய்ஸ் கமான்டு கொடுக்க முடியும்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

லாக் ஸ்கிரீனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களுடன் உரையாட முடியும்.

ப்ரியாரிட்டி மோட்டிபிகேஷன் மோடு

ப்ரியாரிட்டி மோட்டிபிகேஷன் மோடு

இந்த அம்சமானது மேம்படுத்தப்பட்ட டூ நாட் டிஸ்டர்ப் சேவை ஆகும். இந்த அம்சம் செட் செய்த பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நோட்டிபிகேஷன்களுக்கு மட்டும் அதிக சத்தம் கொண்டு எச்சரிக்கை செய்யப்படும்.

ப்ரியாரிட்டி நோட்டிபிகேஷன்

ப்ரியாரிட்டி நோட்டிபிகேஷன்

இந்த மோடில் இரவு நேரங்களில் போன் முழமையாக சைலன்ட் மோடில் வைக்கப்பட்டு விடும், முக்கியமான அழைப்பு அல்லது குறுந்தகவல்களுக்கு மட்டும் எச்சரிக்கை செய்யப்படும்.

கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

லாலிபாப் அப்டேட்டில் எவ்விதமான செயலிகளுக்கும் நோட்டிபிகேஷன்களை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

கெஸ்டு அக்சஸ்

கெஸ்டு அக்சஸ்

உங்களது போனை மற்றவர்களிடம் கொடுக்கும் போது போனை கெஸ்டு மோடில் வைத்தால் அவர்களால் உங்களது தனிப்பட்ட தகவல்களை பார்க்க முடியாது.

பின்

பின்

இடையூறு இல்லாமல் போனில் கேம் விளையாட இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

பீம்

பீம்

இந்த அம்சம் மூலம் செயலிகள் மற்றும் சேவைகளை பயன்படுத்தாமல் ஒரு போனில் இருந்து மற்ற போனுக்கு தகவல்களை பறிமாறி கொள்ளலாம், இதற்கு இரு கருவிகளிலும் என்எப்சி இருக்க வேண்டும்.

ப்ளாஷ் லை்ட்

ப்ளாஷ் லை்ட்

ப்ளாஷ் லைட் ஆப்ஸ் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் பிரபலமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் கூகுள் லாலிபாப் அப்டேட்டில் ப்ளாஷ்லைட் செயலி ஒன்றை வழங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ப்ளாஷ்லைட் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

பேட்டரி

பேட்டரி

இந்த அம்சமானது பேட்டரி நிறைவடைய இருந்தால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடும். மேலும் கருவி முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் பார்க்க முடியும்.

சர்ச் பார்

சர்ச் பார்

புதிய லாலிபாப் அப்டேட்டில் செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும் சர்ச் பார் உங்களது தேடலை மிகவும் எளிதாக மேற்கொள்ள உதவுகின்றது.

டெக்ஸ்ட்

டெக்ஸ்ட்

சில இடங்களில் வார்த்தைகள் தெளிவாக தெரியவில்லை என்றால் High contrast text ஆப்ஷனை பயன்படுத்தலாம். இந்த அம்சம் வார்த்தைகளை தெளிவாக காட்ட உதவும்.

க்ரோம்காஸ்ட்

க்ரோம்காஸ்ட்

க்ரோம்காஸ்ட் செயலி மூலம் ஆன்டிராய்டு 4.4.2 மற்றும் அதற்கும் மேல் இருக்கும் கருவிகளில் இருந்து ஸ்கிரீன்காஸ்ட் செய்யலாம்.

ரீபூட்

ரீபூட்

ஆன்டிராய்டு லாலிபாப் பயன்படுத்தும் அனைத்து கருவியிலும் ரீபூட் செய்த பின் கடைசியாக பயன்படுத்திய செயலிகள் மீண்டும் ஸ்கிரீனில் தெரியும்.

ஃப்ளாப்பி பேர்டு கேம்

ஃப்ளாப்பி பேர்டு கேம்

பழைய அப்டேட்களை போன்று இங்கும் கூகுள் கேம் ஒன்றை வைத்துள்ளது, இதை விளையாட செட்டிங்ஸ் - அபவுட் போன் சென்றால் போதுமானது.

பேட்டரி

பேட்டரி

ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட்டில் பில்ட் இன் பேட்டரி சேவ் மோடு இருக்கின்றது, இது போனின் பேட்டரி குறையும் போது தானாக தேவையற்ற செயலிகளை ஆஃப் செய்து விடும்.

Best Mobiles in India

English summary
cool things to try with Android 5.0. Here you will come to some cool things to try with Android 5.0. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X