வாட்ஸ்ஆப், இந்தியர்களுக்கு உரித்தான ஏழு சுவாரஸ்ய தகவல்கள்.!

Written By:

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் நேற்று வீடியோ கால் அம்சத்தினை வழங்கியது. நீண்ட காலம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு ஒரே சமயத்தில் வழங்கப்பட்டுள்ளன.

குறுந்தகவல், வாய்ஸ் போன்றே வீடியோ கால்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாராலும் வாட்ஸ்ஆப் உரையாடல்களைப் பார்க்வோ அல்லது கேட்கவோ முடியாது.

இதோடு இந்தியா சார்ந்து ஏழு அறிவிப்புகளையும் வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது. அவை என்ன என்பதை இங்கு வழங்கியுள்ளோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மிகப்பெரிய மார்கெட்

மிகப்பெரிய மார்கெட்

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் சர்வதேச அளவில் பார்க்கும் போது இந்தியாவே மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளை விட இந்தியர்களே வாட்ஸ்ஆப்பை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர் என நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.

மாத பயனாளிகள்

மாத பயனாளிகள்

வாட்ஸ்ஆப்பை பொருத்த வரை தற்சமயம் மட்டும் சுமார் 160 மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இந்தியாவில் இருக்கின்றனர்.

மற்ற நாடுகளை விட அதிகம்

மற்ற நாடுகளை விட அதிகம்

வாட்ஸ்ஆப்பின் துணை தலைவர் நீரஜ் அரோரா கூறும் போது, மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம் எனத் தெரிவித்தார்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபேஸ்புக்கை விட பெரியது

ஃபேஸ்புக்கை விட பெரியது

மாதம் சுமார் 160 மில்லியன் ஆக்டிவ் பயனர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக்கை விட முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவில் மாதம் சுமார் 155 மில்லியன் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இது கடந்த மாதம் வரையிலான அறிக்கையாகும்.

இந்திய மொழிகள்

இந்திய மொழிகள்

'வாட்ஸ்ஆப்பை சுமார் 10 இந்திய மொழிகளில் இயக்க முடியும். இதைச் சாத்தியமாக்க வாட்ஸ்ஆப் பயனர்களே உதவினர். வாட்ஸ்ஆப்பை தங்களின் சொந்த தாய் மொழியில் இயக்க விரும்பியோர் மொழி மாற்றம் செய்ய உதவினர்' என அரோரா தெரிவித்துள்ளார்.

ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீடியோ காலிங்

ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீடியோ காலிங்

இந்தியாவில் சீரற்ற இணைய இணைப்புகள் இருப்பதால் வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்குக் கிடைக்கும் இணைய வசதிக்கு ஏற்ப வீடியோ தரம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்கள்

குறுந்தகவல்கள்

தீபாவளியன்று மட்டும் சுமார் 8 பில்லியன் குறுந்தகவல்கள் வாட்ஸ்ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மன்பரீத் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Cool things to know about WhatsApp in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot