ஸ்மார்ட் Google TV இந்தியாவில் அறிமுகம் செய்த coocaa: பேரை போல் விலையும் வித்தியாசம்தான்

|

Coocaa இந்தியாவில் புதிய ஸ்மார்ட் கூகுள் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. கூகா அறிமுகம் செய்த இந்த புதிய டிவியானது கூகுள் டிவி ஓஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த புதிய டிவியில் டூயல் பேண்ட் வைஃபை ஆதரவும் இருக்கிறது. இந்த புதிய டிவியின் அம்சம் மற்றும் விலை குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Coocaa கூகுள் டிவி அறிமுகம்

Coocaa கூகுள் டிவி அறிமுகம்

amglobal ஸ்மார்ட் டிவி பிராண்டான கூகா, அதன் புதிய ஸ்மார்ட் டிவியை சமீபத்திய தலைமுறை ஆதரவோடு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கூகுள் டிவிகளை இந்திய சந்தையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டிவியானது 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கும். இந்த புதிய டிவியானது Amazon.in கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை என்னவென்று தெரியுமா?

Coocaa கூகுள் டிவியின் அடிப்படை விலை

Coocaa கூகுள் டிவியின் அடிப்படை விலை

Coocaa கூகுள் டிவியின் அடிப்படை விலை ரூ.29,999 ஆகும். இந்த புதிய டிவியானது 4கே DR, Dolby audio, Swaiot Home, கூகுள் டுயோ, கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட செயல்பாடுகளுடன் பிற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஆதரவுகள் மூலம் புதிய டிவியை இருந்த இடத்தில் இருந்தபடியே குரல் கட்டளை மூலம் இயக்கலாம்.

ட்ரூ சரவுண்ட் உடன் கூடிய 30 வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம்

ட்ரூ சரவுண்ட் உடன் கூடிய 30 வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம்

அதேபோல் இந்த புதிய டிவியில் செட் டாப் பாக்ஸ் உள்ளிட்டவைகளை இணைக்க 3 HDMI போர்ட்கள், ப்ளூ ரே ஸ்பீக்கர்கள், கேமிங் கன்சோல், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் 2 யூஎஸ்பி போர்ட்கள் இருக்கிறது. DVD ப்ளேயர்கள் உள்ளிட்டவைகளை இணைக்க ஐஆர் போர்ட் ஆதரவும் இதில் இருக்கிறது. அதேபோல் இதன் 32 இன்ச் மாடல் ஆனது டால்பி ஆடியோ, டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் உடன் கூடிய 30 வாட்ஸ் சவுண்ட் வெளியீட்டு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அனைத்து ஓடிடி அணுகலுடன் புதிய டிவி

அனைத்து ஓடிடி அணுகலுடன் புதிய டிவி

புதிய டிவியில் ஓடிடி அணுகலும் இருக்கிறது. அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் உள்ளிட்ட பல அணுகலுக்கான ஆதரவை இந்த டிவி கொண்டிருக்கிறது. இந்த புதிய டிவியில் வயர்லெஸ் இணைப்பிற்காக டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆதரவும் உள்ளது.

Chameleon Extreme 2.0 இமேஜ் எஞ்சின்

Chameleon Extreme 2.0 இமேஜ் எஞ்சின்

Coocaa Google TV இன் பிரத்யேக அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த Coocaa Google TV ஆனது coocaa இன் சமீபத்திய Chameleon Extreme 2.0 இமேஜ் எஞ்சின் உள்ளமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமாக ஒவ்வொரு காட்சியையும் காண அனுமதிக்கிறது.

புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு தான் இது

புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு தான் இது

கூகுள் டிவியின் அம்சம் குறித்து பார்க்கையில், பிரத்யேக ஸ்மார்ட் டிவியை மாற்றுவதற்கு சௌகரியமான சூழ்நிலை இல்லை என்றால் ஏற்கனவே பயன்படுத்தும் டிவியை ஸ்மார்ட்டாக மாற்றலாம். கூகுள் டிவியுடன் கூடிய புதிய Chromecast ஆனது Google TV OS உடன் வருகிறது. கூகுள் டிவி என்பது ஆண்ட்ராய்டு டிவியின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போது ஒரு கேள்வி வரும் சாதாரண டிவியை எப்படி ஸ்மார்ட்டிவியாக மாற்றுவது என்று.

சாதாரண டிவியை ஸ்மார்ட்டிவியாக மாற்றலாம்

சாதாரண டிவியை ஸ்மார்ட்டிவியாக மாற்றலாம்

தொலைக்காட்சி பயன்பாடு என்பது நீண்டகாலமாக வீட்டில் அங்கம் வகிக்கும் பொருள்., தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற் தொலைக்காட்சி தோற்றங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் எப்படி அனைவரையும் ஆக்கிரமித்து வருகிறதோ அதேபோல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு பிரதான ஒன்றாக மாறி இருக்கிறது.

அதிகரித்து வரும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு

அதிகரித்து வரும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு

ஸ்மார்ட் டிவி தேவை அதிகரித்து வந்தாலும் வீட்டில் இருக்கும் பழைய தொலைக்காட்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்படுவதால் ஸ்மார்ட் டிவி வாங்க தயக்கம் ஏற்படும். ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை பழைய டிவியை மாற்றாமல் அதே டிவியில் கிடைக்கச் செய்ய ஒரு வழி இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸைப் பயன்படுத்துவதுதான்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் அணுகல்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் அணுகல்

நாட்டின் முன்னணி டிடிஎச் நிறுவனங்களில் ஏர்டெல் ஒன்றாகும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் தற்போது விற்பனையில் கிடைக்கிறது. இந்த பாக்ஸ் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவுடன் வருகிறது. இந்த எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் சேட்டிலைட் சேனல்கள் மற்றும் அனைத்து பிரதான ஓடிடி பயன்பாடுகளின் உள்ளடக்க அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

முன்னணி பிராட்பேண்ட்களின் சாதனம் மூலம் ஸ்மார்ட்டிவியாக மாற்றலாம்

முன்னணி பிராட்பேண்ட்களின் சாதனம் மூலம் ஸ்மார்ட்டிவியாக மாற்றலாம்

முன்னணி பிராட்பேண்ட்களில் ஒன்றான ACT ஸ்ட்ரீம் டிவி 4கே பாக்ஸ் சேவையை வழங்குகிறது. இது 4 கே ஸ்ட்ரீமிங் தரம், டால்பி ஆடியோ மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் குரல் கட்டுப்பாடு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது. தில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றை ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கிறது

ஆண்ட்ராய்டு எச்டி செட்-டாப் பாக்ஸ் டிஷ் டிவி ஆனது டெட்டாப் பாக்ஸ், கூகுள் அசிஸ்ட்டென்ட் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அமேசான் ப்ரைம் மற்றும் ஜீ5 உள்ளிட்ட பல ஓடிடி பயன்பாடுகளின் அணுகலும் இதில் உள்ளது. இந்த செட்-டாப் பாக்ஸில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம் காஸ்ட் அம்சமும் இருக்கிறது.

டாடா ஸ்கை பிங்+ செட்-டாப் பாக்ஸ்

டாடா ஸ்கை பிங்+ செட்-டாப் பாக்ஸ்

டாடா ஸ்கை பிங்+ செட்-டாப் பாக்ஸ் ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என அனைத்திலும் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க அனுமதிக்கிறது. க்ரோம் காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் அம்சமும் இந்த செட் டாப் பாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. செட்-டாப் பாக்ஸ் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கேம்கள் மற்றும் செயலிகளுக்கான அணுகலை இந்த சாதனம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
coocaa launched new Smart google TV in india: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X