ரூ.1,20,000க்கு Macbook ஆர்டர் செய்த நபர்! கம்பெனி கொடுத்த ஒரு அதிசய பொருள்.. நாய்கள் ஜாக்கிரதை.!

|

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அமேசானில் இருந்து Macbook Proவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு எதிர்பாராத பொருள் ஒன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டெலிவரி பொருளை ஓபன் செய்து பார்த்த அந்த நபர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

யாகூவில் வெளியான இதுகுறித்த தகவலின்படி, UKவை சேர்ந்த ஆலன் வுட் என்ற நபர் நவம்பர் 29 அன்று தனது மகளுக்காக 1200 பவுண்டுகள் (ரூ. 1,20,000) மதிப்புள்ள மேக்புக் ப்ரோவை ஆன்லைன் விற்பனை தளத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைன் போர்ட்டலில் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் அந்த நபருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இங்கு நடந்த டுவிஸ்ட் தான் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ரூ.120000க்கு Macbook ஆர்டர் செய்த நபர்! கம்பெனி கொடுத்த அதிசய பொருள்

ஆன்லைன் விற்பனை தளத்தில் மேக்புக் ப்ரோ ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவுகள் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 24 பாக்கெட்டுகள் நாய் உணவு இருந்ததாக கூறப்படுகிறது. ஆர்டர் செய்யப்பட்ட மேக்புக் ப்ரோவிற்கு பதிலாக நாய் உணவு டெலிவரி செய்யப்பட்டிருப்பதை கண்டு அந்த நபர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து புகாரளித்தும் அந்த ஆன்லைன் விற்பனை தளத்தின் ஆதரவுக் குழு உதவவில்லை எனவும் அந்த நபர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து அந்த பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், "முதலில் இந்த குழப்பத்தை தீர்த்து விடலாம் என்று நம்பினேன். இந்த ஆன்லைன் போர்ட்டலின் வாடிக்கையாளர் மையத்திடம் பேசிய பிறகு, அவர்கள் எனக்கு உதவ முடியாது என்று சொன்னார்கள். ஆனால் நான் செய்த மேக்புக் ஆர்டருக்கு பதிலாக நாய் உணவு அனுப்பியுள்ளாார்கள். தொடர்ந்து பலமுறை ஆன்லைன் போர்ட்டலை அழைத்தேன்" என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து புகார் அளிப்பதற்கு என்றே அந்த ஆன்லைன் போர்ட்டலில் 15 மணிநேரத்திற்கும் மேலாக அந்த நபர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து புகார் அளிக்க ஒவ்வொரு துறைகளாக நிறுவனம் தரப்பில் இருந்து மாற்றி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கிருந்தும் தனக்கு தேவையான பதில் கிடைக்கவில்லை என ஆலன் வுட் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரூ.120000க்கு Macbook ஆர்டர் செய்த நபர்! கம்பெனி கொடுத்த அதிசய பொருள்

பல ஆண்டுகளாக நான் இந்த ஆன்லைன் போர்ட்டலின் வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறேன். இதற்கு முன்பு வரை அவர்களிடம் இருந்து எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஆனால் தற்போது நடந்திருக்கிறது. இது மிகவும் மன அழுத்தமான சூழ்நிலையாக இருக்கிறது என ஆலன் வுட் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அந்த நபர் தெரிவிக்கையில், தற்போது அந்த ஆன்லைன் விற்பனை தளத்தின் செய்தித் தொடர்பாளர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், முழு பணத்தைத் திரும்ப கொடுப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற பல சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கிறது. அதன்படியான ஒரு சம்பவத்தை பார்க்கலம். இ-காமர்ஸ் இணையதளத்தில் தனது தந்தைக்கு ஒருவர் லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அந்த ஆர்டரும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆர்டரை பிரித்து பார்த்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், அந்த பார்சலுக்குள் லேப்டாப்களுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்பு கட்டிகள் இருந்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் பெரும் அதிருப்திக்கு உள்ளானார். இந்த சம்பவம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் நமது கிஸ்பாட் தளத்துக்கு பிரத்யேகமாக பதில் அளித்தது.

அதில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக Flipkart இருக்கிறது. வாடிக்கையாளர் நம்பிக்கையை பாதிக்கும் அனைத்து சம்பவங்களிலும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை நிறுவனம் கொண்டிருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று என அதில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.120000க்கு Macbook ஆர்டர் செய்த நபர்! கம்பெனி கொடுத்த அதிசய பொருள்

மேலும் ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டத்தை வழங்கும் இந்த குறிப்பிட்ட வழக்கில், வாடிக்கையாளர் பேக்கேஜைத் திறக்காமலேயே டெலிவரி எக்ஸிகியூட்டிவ் உடன் OTPயைப் பகிர்ந்துள்ளார். சம்பவத்தின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழு பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான முறையை தொடங்கி விட்டது. இது அடுத்த 3-4 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். சிக்கலைக் கண்டறிந்து, தவறு செய்த தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

Best Mobiles in India

English summary
Continuously Mistaken Deliveries: Now Dog Food Delivery Instead of Rs.1,20,000 Worth Macbook Pro

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X