அமெரிக்க நிறுவனம்னு பேரு., தலைமை இந்தியர்கள்: சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை இப்போ பராக் அகர்வால்- காரணம் இதோ!

|

ஒவ்வொரு நிறுவனத்திலும் தனித்து செயல்பாட்டு தங்களின் திறமைகளாலும் சாதனைகளாலும் முன்னேறியிருந்தாலும், உலக அளவிலான அமெரிக்க நிறுவனங்களில் இந்திய வம்சாவளிகள் தொடர்ந்து தலைமை வகிப்பது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. பராக் அகர்வால் டிவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதிவேற்று இருக்கிறார். நிறுவனத்தில் அவர்களின் தனிப்பட்ட சாதனைகளால் இந்த பதவி கிடைத்திருக்கிறது என்பதும் இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

புதிய தலைமை நிர்வாக அதிகாரி

புதிய தலைமை நிர்வாக அதிகாரி

டுவிட்டர் சமீபத்தில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்திருக்கிறது. அதன் நிறுவனர் ஜாக் டோர்சி சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, வியப்பான விஷயமாக டோர்சி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வாலை நியமித்தார். கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா உட்பட சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களை ஆளும் பல இந்தியர்களில் தொடர்ச்சியா மற்றொரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார் பராக் அகர்வால்.

பகுத்தறிவு, படைப்பாற்றல், சுய விழிப்புணர்வு

பகுத்தறிவு, படைப்பாற்றல், சுய விழிப்புணர்வு

தி நியூ யார்க் டைமஸில் வெளியான அறிக்கையின் படி, பராக் அகர்வால் வருமானம் அனைத்தையும் கணக்கில் கொண்டு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டு சம்பளமாகப் பெறுவார் என குறிப்பிட்டுள்ளது. அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொண்டு கடுமையான ஆய்வுக்கு பிறகு ஒருமனதாக பராக்கை நியமனம் செய்தது. நிறுவனத்தையும் அதன் தேவைகளையும் எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்கிறார் என்பதை கருத்தில் கொள்ளும் அவர் சில காலமாகவே எனது தேர்வாக இருந்தார். அவர் ஆர்வம் மிக்கவர், ஆய்வு, பகுத்தறிவு, படைப்பாற்றல், கோரிக்கை, சுய விழிப்புணர்வு மற்றும் பணிவானவர் என ஜாக் டோர்சி பராக் அகர்வாலை குறிப்பிட்டார். அதோடு தான் தினமும் கற்றுக் கொள்ளும் ஒருவர் எனவும் தங்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது எனவும் டோர்சி குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளிகள்

இந்திய வம்சாவளிகள்

இந்திய வம்சாவளிகள் சிலிக்கான் பள்ளத்தாக்கை ஆண்டு வருகிறார்கள் என்றால் அதன் பட்டியல் விவரங்கள் குறித்து கேள்வி வரலாம். பெப்சிகோவின் இந்திரா நூயி, மாஸ்டர்கார்டின் அஜய் பங்கா, யூனிலீவரின் ஹரிஷ் மன்வானி, ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, அடோப்பின் சாந்தனு நாராயண்னை தொடர்ந்து சிலிக்கான் பள்ளத்தாக்கின் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிஓஓ கிளிப்பில் மிகப் பெரிய நிறுவனத்தின் தற்போதையை சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட பராக் அகர்வால் இணைந்திருக்கிறார்.

தலைமைக்கு தேர்வு செய்ததன் காரணம் என்ன

தலைமைக்கு தேர்வு செய்ததன் காரணம் என்ன

இதையடுத்து பெரிய உலக நிறுவனங்கள் இந்தியர்களை நிறுவனங்களின் தலைமைக்கு தேர்வு செய்ததன் காரணம் என்ன என்ற கேள்வி வரலாம். இதற்கு காரணம் பல இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதத்தில், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக தலைவர்கள், சிலிக்கான் பள்ளத்தாக்கில் முக்கிய பாத்திரங்கள் வகிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணங்களை டிகோட் செய்தனர்.

பன்முகத்தன்மைகளுடன் செயல்படுவார்கள்

பன்முகத்தன்மைகளுடன் செயல்படுவார்கள்

அதில், இந்திய சிஇஓ-க்கள் பன்முகத்தன்மைகளுடன் சிஇஓக்களுக்கும் வசதியாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டனர். மொழி, நம்பிக்கை என இந்தியாவில் வளமான பன்முகத்தன்மை கலாச்சாரம் உள்ளது. எனவே அவர்கள் கலாச்சார பன்முகத்தன்மைக்கு அதிக உணர்திறன் உடையவர்களாக இருக்கிறார்கள் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தியர்கள் முன்னணி பதவிகள்

இந்தியர்கள் முன்னணி பதவிகள்

இந்தியர்கள் முன்னணி பதவிகள் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் குறித்து முன்னதாக வெளியிடப்பட்ட பியூ அறிக்கையை பார்க்கலாம், அதில் 77.5 சதவீத இந்தியர்கள் 2016 இல் இளங்கலை அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர் எனவும் இது பூர்வீகமாக பிறந்த அமெரிக்கர்களுக்கு முற்றிலும் மாறுபட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் குறைந்த வளங்களுடன் அதிகமானவைகளை மேற்கொள்ளும் திறமை உடையவர்கள். இதையடுத்து முன்னணி பதவிகளுக்கு பூர்வீக நபர்களை விட இந்தியர்கள் மீது நம்பிக்கை செலுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்களின் சிஇஓ-க்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டது அவர்களின் தனிப்பட்ட சாதனைகளும், திறமைகளும் முக்கிய பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் சிஇஓ பதவி

பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டர் சிஇஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்தார். குறிப்பாக அவருக்கு பதிலாக ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பரக் அகர்வால் என்பவர் பொறுப்பேற்கிறார். அதேபோல் இதுகுறித்து ஜாக் டோர்ச்சி தனது ஊழியர்களுக்கு ஏழுதியுள்ள கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணை நிறுவனர் முதல் தலைமை நிர்வாக அதிகாரி வரை, நிர்வாகத் தலைவர், இடைக்கல சிஇஓ எனப் பல பொறுப்புகளில் பணியாற்றிய பிறகு இது நான் வெளியேறுவதற்கான நேரம் என முடிவு செயதுள்ளேன். குறிப்பாக ட்விட்டர் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக உள்ளது என நம்புவதால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதிய தலைமை செயல் அதிகாரி பதவி

புதிய தலைமை செயல் அதிகாரி பதவி

பரக் அகர்வால் சுமார் 10 ஆண்டுகளாக ட்விட்டரில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக அவரின் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம் தான் இப்போதைய புதிய தலைமை செயல் அதிகாரி பதவி ஆகும். அதேபோல் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவுக்கு பிறகுஇந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவர் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

தனிநபர் உரிமைகள்

தனிநபர் உரிமைகள்

அதேபோல் ட்விட்டர் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின்படி, தனிநபர் விவரங்களை, அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிநபர் உரிமைகளை காப்பது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்சியாக தான் ஒருவரின் புகைப்படம், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண்கள் உள்ளிட்ட அடையாளங்களை அவரது ஒப்புதல் இன்றி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் என தகவல்

ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் என தகவல்

ட்விட்டர் நிறுவனம் அவருக்கு அளித்துள்ள பணி ஆணையில் ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் ஊதியம் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பரக் அகர்வாலுக்கு ஊக்கத் தொகையாக அவரின் ஆண்டு வருமானத்தில் 150 சதவிகிதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராண்ட் டேட் ஃபேஸ் வேல்யூவின் கீழ் 12.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது தவிர பிற அனைத்து சலுகைகளும் அவருக்கும் கிடைக்கும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Continously Indians Become CEO of Silicon Valley Companies: Sundar Pichai, Satya Nadella and Now Parag Agrawal

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X