குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா? அறிமுகமாகும் Jio short வீடியோ ஆப்! கதிகலங்கும் இன்ஸ்டா..

|

சமூகவலைதளங்களில் பல பயன்பாடுகள் பிரதானமாக இருந்தாலும் ஷார்ட் வீடியோஸ் என்பது மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இந்த நிலையில் இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோ பயன்பாட்டை ஜியோ அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயன்பாட்டின் பீட்டா பதிப்பு தற்போது கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பயன்பாடு ஜனவரி 2023 முதல் அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜியோ ஷார்ட் வீடியோ ஆப்

ஜியோ ஷார்ட் வீடியோ ஆப்

ரோலிங் ஸ்டோன் இந்தியா மற்றும் கிரியேட்டிவ்லேண்ட் ஆசியா உடன் இணைந்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இல் ஒரு புதிய குறுகிய வீடியோ பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. தற்போது இந்த பயன்பாடு பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. இந்த பயன்பாடு பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. படைப்பாளர்களை அதிக பணம் சம்பாதிக்க இந்த தளம் வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது.

படைப்பாளிகளுக்கான சமூக இல்லம்

படைப்பாளிகளுக்கான சமூக இல்லம்

ஸ்டார் பொழுபோக்காளர்களுக்கான தளமாக இது தயாராக இருக்கிறது. பாடகர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், பேஷன் டிசைனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து படைப்பாளிகளுக்கான சமூக இல்லம் இது என்று ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்

இன்ஸ்டா ரீல்ஸ்

நிறுவனம் முழுமையாக இந்த பயன்பாட்டின் விவரத்தை வெளியிடவில்லை என்றாலும் இன்ஸ்டா ரீல்ஸ் போன்று குறுகிய வீடியோ தளமாக இருக்கும் என்பது ஏறத்தாழ முடிவு செய்ய முடிகிறது.

குறுகிய வீடியோ பயன்பாடு தளம் எப்போது கிடைக்கும்?

குறுகிய வீடியோ பயன்பாடு தளம் எப்போது கிடைக்கும்?

ஆப்ஸ் இன் பீட்டா பதிப்பு தற்போது முதலே கிடைக்கிறது. இதன் நிலையான பதிப்பு ஜனவரி 2023 முதல் நேரலைக்கு வரும். ஆனால் பயன்பாட்டின் ஆரம்பக்கட்டத்தில் அனைவராலும் உள்நுழைய முடியாது என கூறப்படுகிறது. படிப்படியாக இந்த பயன்பாடு அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிபார்ப்பு கணக்குகளுக்கு கோல்டன் டிக் போன்ற அம்சம் வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

படைப்பாளிகளுக்கு கிடைக்கும் பலன்கள்?

படைப்பாளிகளுக்கு கிடைக்கும் பலன்கள்?

பயன்பாட்டில் படைப்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த செயலியின் மூலம் படைப்பாளர்கள் நியாயமான அளவில் பணம் சம்பாதிக்க முடியும் எனவும் நற்பெயரின் அடிப்படையில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ஜியோ உறுதியளிக்கிறது. சில்வர், ப்ளூ மற்றும் ரெட் டிக் சரிபார்ப்புகள் மூலம் தளத்தில் பயனர்கள் மதிப்பு வரையறுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஜியோ ஷார்ட் வீடியோ தளம்

ஜியோ ஷார்ட் வீடியோ தளம்

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னிலையில் இருக்கும் ஜியோ தற்போது பல தளங்களில் அடியெடுத்து வைக்கிறது. டிக்டாக்கிற்கு இணை மாற்று என பல தளங்கள் அறிமுகமானது, ஆனால் அவை அனைத்தும் டிக்டாக் போன்று பிரபலமடையவில்லை. இந்த நிலையில் வீடியோவிற்கு என்றே அறிமுகமாகும் ஜியோ ஷார்ட் வீடியோ தளம் பெருமளவு பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையிலும் ஜியோபல கட்டம் முன்னோக்கி வருகிறது.

5G சேவை

5G சேவை

5G சேவையில் ஜியோவின் வளர்ச்சி அளப்பரியதாக இருக்கிறது. ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் ஆனது டெல்லி - என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். சிறப்பு 5ஜி சலுகையின் கீழ் இந்த பகுதியில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி இணையத்தை அனுபவிக்கலாம்.

ஜியோ வெல்கம் ஆஃபர்

ஜியோ வெல்கம் ஆஃபர்

ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் 5ஜி இணைப்பு நகரங்களில் உள்ள அனைவராலும் 5ஜி இணைப்பை பெற முடியாது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் இருக்கும் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இலவச 5ஜி சேவையை அனுபவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Contest Ready for Insta Reels: Jio Going to Launch a Jio Short Video App! Creators Can Earn More Money..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X