குறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்கள்

Posted By: Staff
குறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்கள்

அறிவியலின் முன்னேற்றத்தைப் பார்த்தால் வியப்படயத்தான் வைக்கிறது. பெல்ஜியம் நகரிலுள்ள க்ஹென்ட் என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்தகுறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்களைக் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தகான்டாக்ட் லென்ஸ்கள் வட்டவடிவிலான LCD அமைப்பிலிருக்கும். இந்த LCD அமைப்பானது புகைப்படங்களைக்கூடஇணைப்பில்லாக் கருவியின் மூலம் திரயிடக்கூடியது.

இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால் அதில் சில புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.

"தொழில்நுட்பம் நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டும், மெருகேரிக்கொண்டும் வரும் நிலையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம்" என ஹெர்பர்ட் டி ஸ்மெட் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது, இந்தத் தொழில்நுட்பம் தரத்தை முன்னிறுத்துகிறது. அதாவது, கணிப்பொறித் திரையில் பார்ப்பதைப் போன்று இருக்கவேண்டுமென்பதே. கண்டிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் இதை உண்மையாக்குகிறது என்பதே சொல்லலாம். எப்படியெனில், இதிலும் இணைப்பில்லா கருவிவரை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம்.

இதற்கான வர்த்தக அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot