மகாபாரதம் முதல் கோங்கா லா பாஸ் வரை திட்டமிட்டு மறைக்கப்பட்ட 6 விடயங்கள்.!

  |

  சதி கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழு அல்லது ஒரு நிறுவனம் அல்லது நாட்டின் அரசாங்கம் மூலம் திட்டமிட்டு நடத்தப்பட்டு, ரகசியமாகவே வைத்திருக்கப்படும் நிகழ்வுகள், விடயங்கள் ஆகும்.

  மகாபாரதம் முதல் கோங்கா லா பாஸ் வரை திட்டமிட்டு மறைக்கப்பட்ட விடயங்கள்!

  பொதுவாக ரகசியங்கள் என்றாலே அதில் ஏதோ சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கின்றன என்று தான் அர்த்தம். அப்படியாக, இந்தியாவின் பண்டைய கால இலக்கியத்தில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப காலமான இன்று வரை உள்ள இந்தியா சதி கோட்பாடுகளில் மிகவும் வியக்க வைக்கும் 6 கோட்பாடுகளை பற்றிய விவரங்களையும், அந்தந்த சதி கோட்பாடுகளைப் பற்றி இதுநாள் வரை வெளியாகி உள்ள தகவல்களையும் உள்ளடக்கியதே இந்த கட்டுரை.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இந்திய சதி கோட்பாடு 01 :

  'இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் ஹோமி பாபாவை (Homi Bhabha) கொலை செய்தது சிஐஏ தானா என்பது பற்றியது..!?

  கொலை சம்பவம் :

  ஹோமி பாபா உயிர் இழக்க காரணமான விமான விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்கிறது ஒரு சதி கோட்பாடு.

  அமெரிக்கா :

  தோரியத்தில் (Thorium ) இருந்து சக்தியை பிரித்து எடுப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) தான் ஹோமி பாபாவை கொலை செய்தது என்கிறார்கள் சில சதி கோட்பாட்டாளர்கள்.

  ஆதாரம் :

  ஆனால், இந்த சதிகோட்பாடுக்கு இதுநாள் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்திய சதி கோட்பாடு 02 :

  இந்திய ராணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையான அக்னி 5-ன் தாக்குதல் எல்லை பற்றியது..!

  அரசாங்கம் :

  அதாவது, அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் தூரம் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது பின் அது 5500 - 5800 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்று இந்திய அரசாங்கம் கூறியது.

  அக்னி 4 :

  ஆனால், 17000 கிலோ எடை கொண்ட அக்னி 4 ஏவுகணையானதே சுமார் 4000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் போது, அக்னி 5 அதைவிட அதிகமான தூரத்தை கடக்கும் என்கிறார்கள் சில சதி கோட்பாட்டாளர்கள்.

  வல்லமை :

  சதி கோட்பாட்டாளர்களின் கணிப்பு படி, அக்னி 5 ஏவுகணையானது சுமார் 50000 கிலோ எடையும், 8000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

  முக்கியமாக சீனா :

  மேலும், எதிரிகளை கலங்கடிக்கவே (முக்கியமாக சீனாவை) அக்னி 5-ன் தாக்குதல் எல்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் சதி கோட்பாட்டாளர்கள் கருத்து கூறுகிறார்கள்.

  இந்திய சதி கோட்பாடு 03 :

  மன்னர் அசோகரின் ரகசிய சமூகம் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத 9 பேர் பற்றியது..!

  9 பேர் :

  மனித இனத்திற்கு அத்யாவசியமான 9 விடயங்களை உள்ளடக்கிய 9 புத்தகங்கள் கொடுக்கப்பட்டு மனித இனத்தை அழிவை நோக்கி செல்ல விடாமல் பாதுகாக்கும்படி அசோகரால் 9 பேர் நியமிக்கப்பட்டனர் என்கிறது ஒரு சதி கோட்பாடு.

  9 விடயங்கள் :

  அப்படியாக அந்த புத்தகங்களில் போர், சமூகவியல், தகவல்தொடர்பு, ரசவாதம், மரணம், நுண்ணுயிரியல், ஒளி, ஈர்ப்பு மற்றும் அண்டவியல் ஆகிய 9 விடயங்கள் அடங்கி இருந்தது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  காலம் :

  இந்த ரகசிய சமூக நிகழ்வானது கிபி 270-ல் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது என்பதும், இது சார்ந்த 'தி நயன் அன்நோன்' (The Nine Unknown) என்று ஒரு நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்திய சதி கோட்பாடு 04 :

  பண்டைய கால இந்தியாவில் நடந்த அணு போர் பற்றியது..!

  ஜோத்பூர் :

  2010-ஆம் ஆண்டில் இந்திய நகரமான ஜோத்பூரில் கதிரியக்க சாம்பல் (Radioactive ash) கண்டுப்பிடிக்கப்பட்ட பின்தான் இந்த சதி கோட்பாடு கிளம்பியது.

  மகாபாரத யுத்தம் :

  குறிப்பிட்ட மகாபாரத வசனங்களில் மகாபாரத யுத்தம் நடந்தாக சொல்லப்படும் இடத்தில் கதிரியக்க சாம்பல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளத்தால் தான், பண்டைய காலத்திலேயே அணுபோர் நடத்தப்பட்டுள்ளது என்கிறது ஒரு சதி கோட்பாடு.

  இந்திய சதி கோட்பாடு 05 :

  ஷிவ்கார் பாபூஜி டால்பேட் அவர்களின் விமான டிசைன் பற்றியது..!

  உயரம் :

  ரைட் சகோதரர்கள் உலகின் முதல் விமானத்தை கண்டுப்பிடித்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரான ஷிவ்கார் பாபூஜி டால்பேட் விமானம் ஒன்றை உருவாக்கியதாகவும், அது சுமார் 1500 அடி உயரம் வரை பறக்க கூடியது என்றும் கூறுகிறது ஒரு சதி கோட்பாடு.

  பிரிட்டிஷ் அரசு :

  1895-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்திற்கு எந்த விதமான நிதி உதவியும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பரோடா மகாராஜாவிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கிறது அந்த சதி கோட்பாடு.

  வரலாற்று துரோகம் :

  முதல் விமான தொழில்நுட்பம் இந்தியரிடம் இருப்பதா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த வரலாற்று துரோகத்திற்க்கும், அப்படி ஒரு விமானம் பறந்தது என்பதற்கும் எந்த விதமான சான்றும் இல்லை என்பது குறிப்பிடத்தககது.

  பலவீனம் :

  மேலும் ஷிவ்கார் பாபூஜி டால்பேட் (Shivkar Babuji Talpade) அவர்களின் விமான டிசைன் என்று கூறப்படும் அந்த விமான டிசைன் ஆனது மிகவும் பலவீனமானது போன்றும் தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

  இந்திய சதி கோட்பாடு 06 :

  இந்திய-சீன எல்லையில் யூஎஃப்ஓ (UFO) தளம் உள்ளது என்பது பற்றியது..!

  தகவல்கள் :

  இந்திய - சீன எல்லை பகுதியான லாடக் பகுதியில், பறக்கும் தட்டு பார்த்தாக பல தகவல்கள் உண்டு.

  இந்திய ராணுவம் :

  ஆனால் அவைகள் வெறும் புரளிகள் என்றும், ஒருவேளை அவைகள் சீனாவின் தீ விளக்குகளாக (Chinese fire lanterns) இருக்கலாம் என்று விளக்கம் அளித்து வருகிறது இந்திய ராணுவம்.

  அனுமதி இல்லை :

  கோங்கா லா பாஸ் (Kongka La Pass) பகுதிக்கு செல்ல யாருக்குமே அனுமதி வழங்கப்பட மறுப்பதின் மூலம் அங்கு யூஎஃப்ஓ தளம் இருக்கிறது என்று நம்புகிறது ஒரு சதி கோட்பாடு.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  மறைக்கப்படும் உண்மைகளை உடைக்கும் இந்திய சதி கோட்பாடுகள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more