டெலிகாம் விலை உயர்வு.. நேரடியாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்த ரந்தீப் சுர்ஜேவாலா.. மக்களின் இழப்பிலிருந்து லாபமா?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா (Congress General Secretary Randeep Surjewala), செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் சராசரியாக 15% கட்டணத்தை அதன் பயனர்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த விலை உயர்வு, 109 கோடி பயனர்களின் ஒருங்கிணைந்த சந்தாதாரர்களை பாதிக்கிறது. இதை எப்படி இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் நடிக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் தனியார் மொபைல் ஆபரேட்டர்கள் (Indian Private Mobile Operators) ஒருதலைப்பட்சமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும் அரசாங்கத்தின் போக்கை காங்கிரஸ் பொது செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கண்டித்துள்ளார். இந்த விலை உயர்வு (Telecom Price Hike) நடவடிக்கை மில்லியன் கணக்கான மொபைல் (Mobile) மற்றும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்று ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

டெலிகாம் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி:
எந்த சோதனையும் இன்றி கட்டணத்தை அதிகரிக்க இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது ஏன் என்பதை அரசு (Government) கட்டாயம் விளக்க வேண்டும் என்று ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கட்டண உயர்வு, தகவல் தொடர்பு (Communication) மற்றும் இணைய அணுகலுக்காக (Internet Facility) மொபைல் சேவைகளை பெரிதும் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை அதிகமாக பாதிக்கிறது என்பதை எப்படி அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.
இந்த முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்களின் (Telecom Operators) கட்டண உயர்வு கணிசமான கூடுதல் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொது மக்களுக்கான மொபைல் சேவை (Mobile service) இனி மலிவானதாக இல்லை என்ற கவலையையும் இது உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, வருமான அளவுகள் குறைவாக இருக்கும் கிராமப்புறங்களில் (Villages) வாழும் மக்களை இது அதிகமாக பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தொலைத்தொடர்பு துறையின் நிதி ஆரோக்கியம் அதன் பயனர்களின் இழப்பில் இருந்து வரக்கூடாது என்று கடுமையாக கூறியிருக்கிறார் ரந்தீப் சுர்ஜேவாலா. அதேபோல், "சாமானியர்களின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான கட்டண உயர்வைத் தடுக்க கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது.
மக்களின் இழப்பிலிருந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபம் பார்ப்பதா? இது கண்டிக்கத்தக்கது:
சரியான ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுகளோடு கட்டண மாற்றங்களைக் கண்காணித்த பிறகு மட்டுமே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். டெலிகாம் கட்டணங்களை திறம்பட கட்டுப்படுத்த மற்ற நாடுகளில் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று சுர்ஜேவாலா சுட்டிக்காட்டியுள்ளார். அதே வழியில் இந்திய சில வழிமுறைகளை பின்பற்றி, விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்யலாம் என்று ஐடியாவையும் வழங்கியுள்ளார்.
ஐடியாவிற்கு நடுவே, சுர்ஜேவாலா அரசாங்கத்தின் கவனக்குறைவை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் சமீபத்திய கட்டண உயர்வு எதிர்கால அதிகரிப்புக்கு ஒரு முன்னுதாரணமாக அமையம் என்றும், இது உடனடியாக சரிபார்க்கப்படவில்லை என்றால், இது வழக்கமான ஒரு போக்காக மாறி, தொடர்ந்து தேவையில்லாத விலை உயர்வை மக்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
இது காலப்போக்கில் விலை உயர்ந்த ஒரு சேவையாக மாறிவிடும் என்று எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுர்ஜேவாலா வலியுறுத்தினார். யாராவது இந்த திடீர் விலை ஏற்றத்தை தட்டிக்கேட்க மாட்டார்களா? என்று புலம்பிய சாமானியர்களின் வேதனைக்கு, ரந்தீப் சுர்ஜேவாலாவின் கேள்விகள் தற்போது ஆறுதல் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








