வாழ்த்துகள் இந்தியா!- இஸ்ரோ வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த எலான் மஸ்க்!

|

ககன்யான் திட்டம் அடுத்தடுத்த கட்டம் முன்னோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விகாஸ் இன்ஜினை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இஸ்ரோவுக்கு பாராட்டு

ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ டுவிட்டரில் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் இந்திய தேசிய கொடியையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயற்கைகோள் தகவல் தொடர்பு சாதனங்களை தயாரிக்க உள்ளது என கூறப்படுகிறது.

குறைந்த செலவில் பெரிய இலக்கு

குறைந்த செலவில் பெரிய இலக்கு

விண்வெளி ஆராய்ச்சிகளில் போட்டிகள் இருந்த போதிலும் குறைந்த செலவில் பெரிய இலக்கை அடைய முடிந்த இஸ்ரோ முயற்சிகளை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். கடந்தாண்டு ஸ்பேஸ் எக்ஸ்., விண்வெளி வீரர்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு பால்கான் 9 ராக்கெட்டில் ஏவியபோது இஸ்ரோ நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசாவின் வரலாற்று முதல் ஏவுதலுக்கு வாழ்த்துகள் என கூறியது.

இஸ்ரோ நடத்திய சோதனை வெற்றி

இதையடுத்து தற்போது எலான் மஸ்க் இஸ்ரோ நடத்திய சோதனை வெற்றியடைந்ததையடுத்து எலான்மஸ்க் வாழ்த்துகள் இந்தியா என டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் ககன்யான் மிஷன் ஆரம்பத்தில் 2022 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த திட்டம் செயல்படுத்த தாமதமானது.

விண்கலத்தின் இன்ஜின் சோதனை

விண்கலத்தின் இன்ஜின் சோதனை

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரவ இஞ்சின் பரிசோதனை

திரவ இஞ்சின் பரிசோதனை

இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் GSLV MK III விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது. சுமார் 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுன்ட்டவுன் தொடங்கி பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உணவுகள் பட்டியலை தயாரிக்க இரண்டு ஆண்டுகள் ஆய்வு

உணவுகள் பட்டியலை தயாரிக்க இரண்டு ஆண்டுகள் ஆய்வு

மேலும் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு தேவையான இந்திய உணவுகள் பட்டியலை தயாரிக்க ஏறக்குறைய இரண்டுகள் ஆய்வு செய்தது. பின்பு இந்த பட்டியலில் மூங் தால் ஹல்வா, சூஜி ஹல்வா, உலர்ந்த பாதாம் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அப்பல்லோ பயணத்தின்போது நாசா அமைப்பு தனது விண்வெளி வீரர்களுக்கு அன்னாசி கேக், பீச், சாக்லெட் புட்டு,பிரவுனிகள் ஆகியவை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு

குறிப்பாக விண்வெளி வீரர்கள் ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுவார்கள் எனவும் உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எடுத்து செல்கின்றனர் எனவும் அதேபோல் இந்தியர்கள் வீட்டு உணவை போல சுவைக்க எடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Congratulations India: Elon Musk Praised Isro for Successfully Testing Vikas Engine

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X