போர் பதற்றம்: அணுஆயுத போர் கப்பலை குவித்து பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா.!
இந்தியா பாகிஸ்தானுக்கும் தற்போது போர் பதற்றம் மீண்டும் எழுந்துள்ளது. இதனால் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தனது படைகளை குவித்து வந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் தாக்க நேரிட்டால், தனது கடற்
இந்தியா பாகிஸ்தானுக்கும் தற்போது போர் பதற்றம் மீண்டும் எழுந்துள்ளது. இதனால் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தனது படைகளை குவித்து வந்தன.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்க நேரிட்டால், தனது கடற்பகுதியில் அணு ஆயுத போர் கப்பலையும், விமானம் தாங்கி கப்பலையும் இந்தியா குவித்துள்ளது.

இதில் 60க்கும் மேற்பட்ட போர் கப்பலை இந்தியா அரபிக் கடல் பகுதியில், குவித்துள்ளது. இந்த முறையும் போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடியாக இருக்கும்.

தீவிரவாதிகளை அழித்தது:
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிஆர்பிஎப் வீரர்கள் 2500 வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத விட்டு, தற்கொலை படை தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியது. இதில் சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா தாக்கியது:
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் அமைப்பு மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய விமாப்படை விரட்டியடித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும், இந்தியாவின் மிக் 19 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அபிநந்தன் விடுதலை:
பாரா சூட் மூலம் அபிந்தன் பாகிஸ்தான் எல்லைலைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. பிறகு, இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக அவரை பாகிஸ்தான் தாக்க பாதுகாப்போடு விடுதலை செய்தது.

முப்படைகளும் போர் ஒத்திகை:
பாகிஸ்தானுக்கும் இந்தியா ராணுவத்திற்கும் போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய முப்படைகளும் TROPEX-19 என்ற தலைப்பில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
வடக்கு அரபிக் கடல் பகுதியில் இந்திய கடற்பனையில் போர் கப்பல் குவிக்கப்பட்டுள்ளன.

அணுசக்தி போர் கப்பல்கள்:
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி போர் கப்பல்களான ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் சக்ரா ஆகியவை எதிரிகளின் நடமாட்டை நீருக்குள் மூழ்கி தொடர்ந்த கண்காணித்து வருவதாக இந்தியா கடற்படை தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் பகுதியில் குவிப்பு:
புல்வா தாக்குதுல் நடக்கும் முன் போர் ஒத்திகைக்காக இந்திய அனைத்து போர் கப்பல்களும், கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அரபிக் கடல் பகுதியில் குவித்துவைக்கப்பட்டிருந்தது.

இரண்டு அணுசக்தி போர் கப்பல் தயார்:
பாகிஸ்தான் கடல் வழியாக தாக்கினாலும், இந்தியாவிடம் உள்ள இரண்டு மூழ்கி கப்பல்களும் தக்கபதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன. விமானம் தாங்கிய போர் கப்பல்கள் ஐஎன்எஸ் விக்கிரமாத்தித்தியா உள்ளிட்ட போர் கப்பல்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

வாபஸ் வாங்கிய பாகிஸ்தான்:
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, வடக்கு அரபிக் கடல்பகுதியில் இந்திய கடற்படை கப்பல்களில் தீவர ரோந்து மற்றும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களில் தொடர் கண்காணிப்பால், பயந்து போன பாகிஸ்தான் அரபிக்கடல் பகுதியில் பொதுவான கடற்பரப்பில் நிலைநிறுத்தியிருந்த தனது கடற்படைகளை உடனடியாக வாபஸ் பெற்றது. மேலும் மாக்ரான் கடற்கரையோரம் சென்று போர் கப்பல்களை பாகிஸ்தான் நிறுத்தியது.

வடக்கு அரபிக் கடலில் குவிக்கும் இந்தியா:
புல்வதா தாக்குதலை தொடர்ந்து, வடக்கு அரபிக் கடல் பகுதியில், அணு ஆயுத போர் கப்பல்கள், ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா உள்ளிட்ட போர் கப்பலை குவித்து வருகின்றது.

ஏவுகணை ஏவியது பாகிஸ்தான்:
இந்திய துருப்புகள் மீது ஏறிகணைகளையும், ஏவுகணைகளையும் ஏவி வெற்று அச்சுத்தலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருந்தது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளித்துள்ள தகவலால் அம்பலமாகியுள்ளது.

போர் நடக்கும் சூழல்:
இந்தியாவின் மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் என்று முனைப்போடு இருக்கின்றது. இந்தியாவின் அடி பலமாக இருக்கும் என்று நட்புறவு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதவாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடியாக இந்தியா கொடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications