ஏடிஎம் கார்டு கதை முடிஞ்சது.. ஸ்கேன் பண்ணா.. பணம் எடுக்கலாம், பணம் போடலாம்.. UPI ATM கொண்ட பேங்க் அறிமுகம்!
ஃபின்டெக் நிறுவனமான ஸ்லைஸ் (Slice) ஆனது இந்தியாவின் முதல் முழுமையாக யுபிஐ கொண்டு இயங்கும் பேங்க் கிளையை (Completely UPI-powered Bank Branch) பெங்களூருவில் தொடங்கி உள்ளது. பரிசோதனை நோக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கி கிளை ஆனது - டெபிட் கார்டுகள் (Debit Cards) அல்லது பிஸிக்கல் ஆவணங்களின் (Physical Documents) தேவையை நீக்கி, முழுமையான டிஜிட்டல் பேங்க் அனுபவத்தை வழங்குகிறது.
அக்கவுண்ட் திறப்பது (Account Opening), பணம் போடுவது (Cash Deposit) மற்றும் பணம் எடுப்பது (Cash Withdrawal) உள்ளிட்ட அனைத்து அடிப்படை சேவைகளும் யுபிஐ மூலமே இயக்கப்படுகின்றன. இந்த கிளையில், யுபிஐ அடிப்படையிலான ஏடிஎம்-கள் (UPI integrated ATM) மற்றும் டிஜிட்டல் கியோஸ்க்குகளும் (Digital Kiosks) உள்ளன. டெபிட் கார்டு இல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் யுபிஐ ஆப்களை (UPI Apps) பயன்படுத்தலாம்.

இந்த வங்கி கிளையை பார்வையிடும் வாடிக்கையாளர்கள் - வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள டேப்லெட்களை பயன்படுத்தி சேவிங்ஸ் அக்கவுண்ட்களை (Savings Account) திறக்கலாம். டிஜிட்டல் கியோஸ்க்குகள், யுபிஐ ஆப்களுடன் இணைக்கப்பட்ட க்யூஆர் கோட்களை (QR Codes) ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஸ்லைஸ் நிறுவனத்தின் இந்த யுபிஐ பேங்க் பிரான்ச் ஆனது கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள கோரமங்கலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் செயல்முறை மூலம் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட உதவும் ஒரு ரோபோ அசிஸ்டன்ட்டும் இந்த வங்கி கிளையில் உள்ளது. இந்த ரோபோ அசிஸ்டன்ட், யுபிஐ அடிப்படையிலான வங்கி செயல்முறையை விளக்கும் ஒரு மனித உருவிலான ரோபோ ஆகும்.
ஸ்லைஸ் அறிமுகம் செய்துள்ள இந்த யுபிஐ-ஒன்லி பேங்க் பிரான்ச் (UPI-only Bank Branch) ஆனது டிஜிட்டல் பைனான்ஸ்-ஐ நோக்கிய இந்தியாவின் தொடர்ச்சியான உந்துதலில் ஒரு முக்கியமான மைல்கல் ஆக பார்க்கப்படுகிறது மற்றும் இந்த வகை யுபிஐ வங்கிகள் மற்றும் யுபிஐ ஏடிஎம்கள் ஆனது நாடு முழுவதுமாக உள்ள எதிர்கால வங்கி கண்டுபிடிப்புகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
யுபிஐ அடிப்படையிலான வங்கி கிளையை அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாமல், ஸ்லைஸ் நிறுவனமானது வருடாந்திர கட்டணங்கள் அல்லது ஜாயினிங் கட்டணங்கள் (Annual or Joining Fee) இல்லாத யுபிஐ-லிங்க்டு கிரெடிட் கார்டையும் (UPI linked credit card) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டு வாங்குதல்களில் 3% வரை கேஷ்பேக் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டணங்களை மூன்று வட்டி இல்லாத இஎம்ஐ-களாகப் பிரிக்க அனுமதிக்கும் ஸ்லைஸ் இன் 3 (Slice in 3) வசதியை வழங்குகிறது.

மேலும் பல நாடுகளில் யுபிஐ சேவை: யுபிஐ சேவை ஆனது விரைவில் இன்னம் சில நாடுகளில் தொடங்கப்படும் என்று, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry - CII) ஏற்பாடு செய்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய நிதி சேவைகள் துறையின் (Department of Financial Services - DFS) செயலாளர் ஆன எம். நாகராஜு கூறியுள்ளார்.
டிஜிட்டல் கட்டண முறைகளில் இந்தியா பல நாடுகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது. மேலும் இந்த யுபிஐ அமைப்பை பல நாடுகளுக்கு விரிவுபடுத்த முயற்சிக்கிறோம். இப்போது நாங்கள் பல நாடுகள் உடன் வேலை செய்து வருகிறோம் என்று நினைக்கிறேன். இன்னும் சில நாடுகளுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். இந்த ஆண்டு எங்கள் தடத்தை வேறு சில நாடுகளுக்கும் விரிவுபடுத்துவோம் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது யுபிஐ சேவை ஆனது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. யுபிஐ சேவையானது - இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த பிறகு யுபிஐ, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது இதை 2021 இல் பூட்டானில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








