ஒற்றுமை சிலை விற்பனை? ஒஎல்எக்ஸ் விளம்பரத்தால் சர்ச்சை.! காவல்துறையினர் விசாரணை.!

|

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர்இ சர்தார் வல்லபாய் படேல். படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

தந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது

இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.30,000கோடிக்கு விற்பனை

இந்நிலையில் உலகிலேயே மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை ரூ.30,000கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

30 ஆயிரம் கோடி

கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஒஎல்எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் கடந்த சனிக்கிழமை விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் போலீசார்

மேலும் இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் விளம்பரம் செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து குஜராத் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.

இதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்!இதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்!

பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது

குறிப்பாக இந்திய தண்டணைச் சட்டம் தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் மோசடிபிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Complaint Registered for Statue of Unity Sell in OLX: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X