உஷார்:இன்ஸ்டாவில் பதிவிட்ட பெண்ணின் புகைப்படம்-தவறாக சித்தரித்து பணம் சம்பாதித்த கும்பல்!

|

சமூகவலைதள கணக்கில் பதிவிட்ட பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி பாலியல் கும்பல் வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து வந்தது கண்டறியப்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் தொழில்நுட்பம்

நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் தொழில்நுட்பம்

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அடுத்தடுத்தக்கட்டத்தை நோக்கி வளர்ந்துக் கொண்டே வருகிறது. நாமும் அதற்கு இணையாக பயணித்துக் கொண்டே தான் வருகிறோம். தொழில்நுட்பத்தில் இருக்கும் அம்சங்களை உணர்ந்து பயன்படுத்தும் நாம் அதன் பாதுகாப்பு அம்சத்தை ஏனோ ஆராய்வதில்லை. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று சமூகவலைதளம். பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர், இன்ஸ்டா பயன்பாடு இந்த காலக்கட்டத்தில் பிரதான பயன்பாடாக இருக்கிறது.

சமூகவலைதளங்களில் அதிக நேரம்

சமூகவலைதளங்களில் அதிக நேரம்

தற்போது பலரும் சமூகவலைதளங்களில்தான் தங்களது பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 500 எம்பியில் இருந்து ஜிபி அளவிலான இணைய சேவையை சமூகவலைதளங்களில் பெரும்பாலானோர் செலவிட்டு வருகின்றனர்.

நொய்டாவில் பெண் ஒருவர் புகார்

நொய்டாவில் பெண் ஒருவர் புகார்

இந்த நிலையில் நொய்டாவில் பெண் ஒருவரின் புகைப்படம் பாலியல் தொழில் செய்யும் மர்ம நபர்களால் தவறாக சித்தரித்து பயன்படுத்தி இருப்பது பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல்

பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இணையம் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் ஒன்று தன்னுடைய புகைப்படத்தை வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் ஒரு தொலைபேசி எண்ணோடு பரப்பி வருவதாக தெரிவித்திருந்தார்.

4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.! குறைந்த விலை.!

இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம்

இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம்

அவர்கள் பயன்படுத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாவில் தான் பதிவிட்ட புகைப்படம் என்றும் அந்த கும்பல் அதை எடுத்து தவறாக பயன்படுத்தி விளம்பரம் செய்து பண மோசடி செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நண்பர்கள் சிலர் அளித்த தகவல்

நண்பர்கள் சிலர் அளித்த தகவல்

மேலும் இந்த புகாரில், தான் இரண்டு குழந்தைக்கு தாய் எனவும் தனது புகைப்படத்தை இதுபோன்று மோசமாக சித்தரித்து பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்து போனதாகவும் இதுகுறித்து நண்பர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் அறிந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

செல்போன் நம்பருடன் இருந்த விளம்பரம்

செல்போன் நம்பருடன் இருந்த விளம்பரம்

தனது புகைப்படத்தை ஒரு செல்போன் நம்பருடன் இருந்த விளம்பரம் செய்யப்பட்டிருந்தது எனவும் அந்த எண்ணுக்கு தன்னுடைய நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார் அப்போது புகைப்படத்தில் உள்ள பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறோம் அதற்குமுன்பாக ஒரு வங்கிக் கணக்கு கொடுத்து அதற்கு பணம் போடும்படி கேட்டார்கள் எனவும் கூறினார். இந்த புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Complain Filed against a Prostitution Racket for using UP Woman's Social Media Photos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X