Home
News

இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஜியோ நிறுவனம் தற்போது சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கி உள்ளது. விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அதேபோல் மற்ற நிறுவனங்களை விட அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.

photo courtesy: unsplash

ரூ.750 பட்ஜெட்டில் இரண்டு திட்டங்கள்

ரூ.750 பட்ஜெட்டில் இரண்டு திட்டங்கள்

குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் ரூ.750 பட்ஜெட்டில் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. அதாவது ரூ.719 மற்றும் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் வைத்துள்ளது இந்நிறுவனம்.

எந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது?

இந்த இரண்டு திட்டங்களில் எந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது? அதேபோல் எந்த திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். முதலில் இந்த ரூ.719 மற்றும் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 180ஜிபி டேட்டா நன்மைகிடைக்கிறது.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

 எது சிறந்தது?

எது சிறந்தது?

ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த இரண்டு திட்டங்களில் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதாவது பயனர்கள் ரூ.719 திட்டத்தைத் தேர்வு செய்வதை விட கூடுதலாக ரூ.30 செலுத்தி இந்த ரூ.749 திட்டத்தை தேர்வு செய்துவிடலாம். ரூ.749 திட்டத்தை தேர்வு செய்வது மூலம் கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் வேலிடிட்டி நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் இரண்டு திட்டங்களை இப்போது பார்ப்போம்.

 ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Comparison between Reliance Jio's Rs 719 and Rs 749 prepaid plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X