வெப் கேம் ON செய்ய முடியாது- ஊழியர்.! உடனே பணிநீக்கம்.! ஓகே இந்தாங்க 60 லட்சம்- நீதிபதி.!

|

உழைப்பாளி இல்லாத நாடு என்று நம்மால் ஒரு சிறிய நாட்டை கூட சுட்டி காட்ட முடியாது. உழைப்பாளி என்றாலே ஒரு தனி கெத்து தான்.!

தினமும் காலை முதல் மாலை வரை உழைக்கும் நம்மை போன்ற உழைப்பாளிகள் இல்லை என்றால், நிறுவனங்களுக்கு வருமானமே கிடையாது.

என்ன தான் நாம் கெத்தாகப் பேசினாலும், உண்மையில் நிறுவனங்கள் தான் உழைக்கும் ஊழியர்கள் (Employee) மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இது யாராலும் மறுக்க முடியாத உலகளவு உண்மையாகும்.!

சரியான காரணம் இல்லாமல் பணிநீக்கம்.! நிறுவனம் மீது போட்டாரு ஒரு கேஸ்.!

சரியான காரணம் இல்லாமல் பணிநீக்கம்.! நிறுவனம் மீது போட்டாரு ஒரு கேஸ்.!

இப்படி சமீபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அதன் ஊழியர் மீது ஆதிக்கம் செலுத்தி, அவரை பணியில் இருந்தே நீக்கிவிட்டது.

காரணம், சரியாக இல்லாமல் வேலையைவிட்டு நீங்கள் சும்மாவா இருப்பாங்க.. போட்டார் ஒரு கேஸை.!

ஆம், அந்த ஊழியர் பணிபுரியும் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று துவங்கிவிட்டார். இறுதியில், நீதிபதி நம்பமுடியாத தீர்ப்பை வழங்கி ஊழியர் தலையில் பண மழையை போலியச் செய்திருக்கிறார்.

வேலை செய்யும் போது வெப் கேம் On இல் இருக்கனும்.!

வேலை செய்யும் போது வெப் கேம் On இல் இருக்கனும்.!

வினோதமான காரணத்திற்காக ஒரு ஊழியரை பணி நீக்கம் (Company Fired Employee) செய்து, நிறுவனம் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டது.

உண்மையில் என்ன நடந்தது? எதனால் அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்? என்பதை இப்போது தெளிவாக பார்க்கலாம்.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வீட்டில் இருந்து வேலை (Work From Home) செய்யும் போது வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஒரு தொழிலாளியை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! இவ்வளவு கம்மி விலையில் இத்தனை மாடலா?ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! இவ்வளவு கம்மி விலையில் இத்தனை மாடலா?

Webcam ஆன் செய்ய மறுத்த ஊழியர் பணிநீக்கம்.!

Webcam ஆன் செய்ய மறுத்த ஊழியர் பணிநீக்கம்.!

ஆம், சரியாக தான் படித்தீர்கள், வெப் கேமராவை (Webcam) ON செய்யாததற்காக அந்த ஊழியரை வேலையில் இருந்து தூக்கிவிட்டது. இந்த ஊழியர் நெதர்லாந்தில் வசிப்பவராவர்.

அனால், ஃபுளோரிடாவைச் சேர்ந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனமான சேது (Chetu) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த ஊழியர் வீட்டில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஒன்பது மணி நேரம் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 மணி நேரமும் வெப் கேம் ON இல் இருக்கணுமா? அநியாயம்.!

9 மணி நேரமும் வெப் கேம் ON இல் இருக்கணுமா? அநியாயம்.!

வீட்டில் இருந்து வேலை செய்யும் இவரை, அந்நிறுவனம் 9 மணி நேரமும் வெப் கேமராவை ஆன் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளது.

அதேபோல், லேப்டாப்பின் டிஸ்பிளே தகவலை கண்காணிக்க நிறுவனம் பிரத்தியேகமான சாப்ட்வேரை (Laptop display surveillance software) பயன்படுத்தியுள்ளது. முழு நேரமும் அவரை வீடியோ லைவ் செய்ய கூறியுள்ளது.

இது அந்த ஊழியருக்கு அசவுகரியத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், நிறுவனம் உத்தரவிட்ட ஆணையை ஊழியர் ஏற்க மறுத்திருக்கிறார்.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு.!

நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு.!

நிறுவனம் கூறிய பின்பு வெப் கேமராவை ஆன் செய்யாத விஷயத்திற்காக அவரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை 9 மணி நேரமும் லைவ் ஷேர் (Live Share Video) செய்தால் யாருக்கு தான் சவுகரியமாக இருக்கும் சொல்லுங்க.!

வெப் கேம் மூலம் தன்னை எப்போதும் கண்காணிப்பதன் மூலம் நிறுவனம் தனது தனியுரிமையை ஆக்கிரமிப்பதாக உணர்ந்ததாகக் கூறிய ஊழியர், நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஊழியர் மீது போலியான குற்றசாட்டுகளா?

ஊழியர் மீது போலியான குற்றசாட்டுகளா?

இவரை பணிநீக்கம் செய்த நிறுவனம் அதற்கான காரணமாக சில விதிமீறல்களை அவர் மீது போலியாக குற்றம்சாட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி, பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனத்தின் அறிக்கையில், ஊழியர் மீது "அடங்காமை" மற்றும் "வேலை செய்ய மறுப்பது" போன்ற காரணங்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, நெதர்லாந்து நீதிமன்றம் Chetu நிறுவனத்தின் மீது மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.

iPad தோத்துடும் போலயே.! Lenovo Tab P11 Pro பாக்க செமயா இருக்கு.. ஆனா ரேட் தான் கொஞ்சம்.!iPad தோத்துடும் போலயே.! Lenovo Tab P11 Pro பாக்க செமயா இருக்கு.. ஆனா ரேட் தான் கொஞ்சம்.!

அம்மாடி.! 60 லட்சம் ஃபைன்-ஆ.!

அம்மாடி.! 60 லட்சம் ஃபைன்-ஆ.!

தொலைநிலை ஊழியர்கள் தங்கள் வெப் கேமராவை ஆனில் வைத்திருக்க வேண்டும் என்பது மனித உரிமை மீறலாகும் என்று கூறிய நீதிபதி, நிறுவனம் செய்தது முற்றிலும் தவறானது என்று கூறி, $72,700 என்ற பெரும் அபராதத்தை விதித்துள்ளார்.

இந்த அபராதம் நெதர்லாந்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த ஊழியருக்குப் போய் சேரும். $72,700 டாலர்கள் என்பது இந்திய மதிப்பில், சுமார் ரூ. 60 லட்சம் ஆகும்.

ஊழியர்களை ஏன் நிறுவனங்கள் கடுமையாக கண்காணிக்கிறது?

ஊழியர்களை ஏன் நிறுவனங்கள் கடுமையாக கண்காணிக்கிறது?

சுவாரஸ்யமாக, இந்த நிறுவனம் உட்பட இன்னும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கண்காணிக்கக் கண்காணிப்பு சாப்ட்வேர்களைப் பயன்படுத்துகின்றன.

Digital.com இன் அறிக்கை படி, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் வணிகங்களில் சுமார் 60 சதவிகிதம் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தித்திறன் மற்றும் வேலை செயல்பாடுகளைக் கண்காணிக்க இத்தகைய சாப்ட்வேரை பயன்படுத்துகின்றன.

வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வீணடிக்கிறார்கள் என்பதை இந்த சாப்ட்வேர் காட்டுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Company Gets 60 Lakh Fine For Firing Employee Who Refused To Switched Off His Webcam While WFH

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X