இந்த லிஸ்ட்ல உங்களது இருக்கா? 2023-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட 20 பாஸ்வேர்ட்களின் பட்டியல் வெளியானது!
இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்ட 200 பாஸ்வேர்ட்களின் (Common Passwords 2023) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 20 பாஸ்வேர்களையும், அவற்றை க்ராக் (Crack) செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்கிற விவரத்தையும் இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.
அந்த 20 பாஸ்வேர்ட்களில் ஒரே ஒரு பாஸ்வேர்ட்-ஐ க்ராக் செய்ய மட்டுமே 17 நிமிடங்கள் ஆகிறது. மீதமுள்ள பெரும்பாலான பாஸ்வேர்ட்களை (அதாவது 17 பாஸ்வேர்ட்களை) ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் க்ராக் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பட்டியல்:

முதல் இடத்தில் இருப்பது 123456 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். இரண்டாவது இடத்தில் இருப்பது 'அட்மின்' (admin) என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.
இந்த டாப் 20 பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது 123456786 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். நான்காவது இடத்தில் இருப்பது 123456789 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.

ஐந்தாவது இடத்தில் இருப்பது 1234 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். ஆறாவது இடத்தில் இருப்பது 12345 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.
ஏழாவது இடத்தில் இருப்பது 'பாஸ்வேர்ட்' (password) என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். எட்டாவது இடத்தில் இருப்பது 123 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.

ஒன்பதாவது இடத்தில் இருப்பது 'Aa123456' என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். பத்தாவது இடத்தில் இருப்பது 1234567890 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.
இந்த பட்டியலில் பதினோராவது இடத்தில் இருக்கும் 'அன்னோன்' (UNKNOWN) என்கிற பாஸ்வேர்ட்-ஐ க்ராக் செய்யத்தான் 17 நிமிடங்கள் ஆகும். க்ராக் செய்ய எடுத்துக்கொள்ளப்படும் நேரம் அதிகமாக இருந்தாலும் கூட, இதுவும் கூட, இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்ட ஒரு பாஸ்வேர்ட் ஆகும். அதாவது இதுவும் பாதுகாப்பானதல்ல என்று அர்த்தம்.
பனிரெண்டாவது இடத்தில் இருப்பது 1234567 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். பதிமூன்றாவது இடத்தில் இருப்பது 123123 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.
பதினான்காவது இடத்தில் இருப்பது 111111 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். பதினைந்தாவது இடத்தில் இருப்பது 'பாஸ்வேர்ட்' (Password) என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.
பதினாறாவது இடத்தில் இருப்பது 12345678910 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். பதினேழாவது இடத்தில் இருப்பது 000000 என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும்.
பதினெட்டாவது இடத்தில் இருப்பது அட்மின்123 (admin123) என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்ய 11 நொடிகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பத்தொன்பதாவது இடத்தில் இருப்பது **** என்கிற பாஸ்வேர்ட் ஆகும். இதை க்ராக் செய்யவும் 1 நொடிக்கும் குறைவான நேரமே ஆகும். கடைசி மற்றும் இருபதாவது இடத்தில் யூசர் (user) என்கிற பாஸ்வேர்ட் உள்ளது. இதையும் 1 நொடிக்குள் க்ராக் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications