11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே: அதிசிய பச்சை வால் நட்சத்திரம்., மிஸ் பண்ணாதிங்க!

|

11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் அதிசய பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களில் கூட பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்தில் நுழையும் அதிசிய பச்சை வால் நட்சத்திரம்

11 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் இந்த அதிசிய பச்சை வால் நட்சத்திரமான ஸ்வான், பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்தின் வால் மட்டும் 77 லட்சம் கிமீ நீளம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்கும்

இந்த நட்சத்திரமானது பனி மற்றும் தூசுக்களாலான இந்த வால் நட்சத்திரமானது ஆஸ்திரேலியாவின் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்கும் எனவும் இது சூரியனை நோக்கிய வழியில் பயணிக்கும் போது அது சூரிய ஒளியை பிரதிபலிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சூரியனை நோக்கி செல்லும்

இந்த நட்சத்திரம் மே 13 ஆம் பூமிக்கு அருகில் பயணிக்கத் தொடங்கியதாகவும் வருகிற மே 27 ஆம் தேதி சூரியனை நோக்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தை கடப்பதற்கு முன்பாக இந்த நட்சத்திரம் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும் எனவும் கூறப்படுகிறது. மே மாத இறுதியில் இந்த நட்சத்திரத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பூமியில் இருந்து சுமார் 5.3 கோடி மைல்கள் தூரம்

இது பூமியில் இருந்து சுமார் 5.3 கோடி மைல்கள் தூரம் இருக்கும் எனவும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதோடு 5 முதல் 6 நாட்கள் வரை கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களாலேயே இந்த நட்சத்திரத்தை கண்டு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு புதிய கருந்துளை

ஒரு புதிய கருந்துளை

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருந்துளையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய கருந்துளை கிட்டத்தட்டப் பூமிக்கு அடுத்த பக்கத்தில்தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கருந்துளை பூமியிலிருந்து சுமார் 1000 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் அமைந்துள்ளது. விண்வெளி கணக்கின்படி 1000 ஒளி ஆண்டுகள் என்பது மிகவும் அருகாமையில் தான் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கருந்துளை, இந்த கருந்துளை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருந்துளைகளை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியுமா?

கருந்துளைகளை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியுமா?

பொதுவாக விஞ்ஞானிகள் கருந்துளைகளை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியுமா? கருந்துளையைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசியால் சூழப்பட்டிருக்கும், இந்த வாயு மற்றும் தூசிகளைக் கருந்துளை உள் இழுக்கும் பொழுது ​​அதிக சக்தி கொண்ட சமிக்ஞைகளை உமிழ்கின்றன, இந்த சக்திவாய்ந்த சமிக்கை உமிழ்வுகளை தொலைநோக்கிகள் கண்டறிந்து கருந்துளை உள்ள இடத்தை சுட்டிக்காட்டுகின்றன, இப்படி தான் பொதுவாகக் கருந்துளைகள் கண்டுபிடிக்கப்படுகிறது.

பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடிக்க வாய்ப்பு

பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடிக்க வாய்ப்பு

L-1 அமைப்பு பூமியிலிருந்து சற்று தொலைவில் தான் உள்ளது, ஆனால் வானியல் அடிப்படையில் இந்த சற்று தொலைவு ஒளி ஆண்டுகள் உண்மையில் இன்னும் நெருக்கமாகத் தான் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அமைப்புகளில் இன்னும் பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதன் மூலம், புதிய நட்சத்திரங்கள் பற்றி அறிய வழிவகுத்து, அவை எவ்வாறு உருவாகின என்பது குறித்து சில புரிதல்களை விளக்கக்கூடும் என்ற நம்புகின்றனர்.L-1 அமைப்பு பூமியிலிருந்து சற்று தொலைவில் தான் உள்ளது, ஆனால் வானியல் அடிப்படையில் இந்த சற்று தொலைவு ஒளி ஆண்டுகள் உண்மையில் இன்னும் நெருக்கமாகத் தான் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அமைப்புகளில் இன்னும் பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதன் மூலம், புதிய நட்சத்திரங்கள் பற்றி அறிய வழிவகுத்து, அவை எவ்வாறு உருவாகின என்பது குறித்து சில புரிதல்களை விளக்கக்கூடும் என்ற நம்புகின்றனர்.

பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருந்துளை! இது மற்ற கருந்துளை போல் இல்லை ஸ்பெஷல்!பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருந்துளை! இது மற்ற கருந்துளை போல் இல்லை ஸ்பெஷல்!

source: independent.co

Best Mobiles in India

English summary
Comet Swan closest point to the sun, on May27: amazing and spectacular show to the unaided eye

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X