கனவுல கூட எதிர்பார்க்கல.. Redmi K50i 5G இப்படி ஒரு பட்ஜெட்ல வரும்னு!

|

இந்தியாவில் ரெட்மி கே சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு கே20 சீரீஸ் ஸ்மார்ட்போன்களே ஆகச்சிறந்த சாட்சிகள்!

ஆனால் "யாரு கண்ணு பட்டதோ!" தெரியவில்லை ரெட்மி கே30 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்ப்படவில்லை; மாறாக அது போக்கோ எக்ஸ்2 என்கிற பெயரின் கீழ் போக்கோ ஸ்மார்ட்போனாக அறிமுகமானது.

அது ரெட்மி கே30 ஆக அறிமுகமாகி இருந்தால்..?

அது ரெட்மி கே30 ஆக அறிமுகமாகி இருந்தால்..?

போக்கோ எக்ஸ்2 ஒரு நல்ல மாடல் தான், ஆனால் அது ரெட்மி கே30 ஆகவே இந்தியாவில் அறிமுகமாகி இருந்தால்.. அதற்கான 'மவுசு' வேற லெவலில் இருந்து இருக்கும் என்பதே எங்கள் கருத்து.

"கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது!" என்பதை புரிந்து கொண்ட, அதாவது 'ரீபிராண்டிங்' செய்வது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்ட ரெட்மி நிறுவனம், அதன் கே சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதே பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று சமீபத்தில் அறிவித்தது. அதனொரு பகுதியாக ரெட்மி கே50ஐ 5ஜி அறிமுகமாகி உள்ளது!

இனி இனி "பத்தல பத்தல"னு சொல்ல முடியாது; நியாயமான விலையில் உலகின் முதல் 200W போன்!

பட்டையை கிளப்பும் முக்கிய அம்சங்கள்!

பட்டையை கிளப்பும் முக்கிய அம்சங்கள்!

இன்று (அதாவது ஜூலை 20) இந்தியாவில் அறிமுகமான ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட், ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான வேப்பர் கூலிங் (VC) சேம்பர் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? எப்போது முதல், எந்த இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்? ஏதேனும் அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதா? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விரிவான விவரங்கள்.

Redmi K50i 5G-யின் டிஸ்பிளே: பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

Redmi K50i 5G-யின் டிஸ்பிளே: பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான MIUI 13 கொண்டு இயங்கும் ரெட்மி K50i 5ஜி ஆனது, 144Hz வரையிலான செவன்-லெவல் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 270Hz டச் சம்ப்ளிங் ரேட் உடனான 6.6-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,460 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, HDR10 ஆதரவு, டால்பி விஷன் மற்றும் 650 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் வழங்குகிறது.

சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?

பெர்ஃபார்மென்ஸ் பிச்சிக்கும்!

பெர்ஃபார்மென்ஸ் பிச்சிக்கும்!

இந்த லேட்டஸ்ட் ரெட்மி கே சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 SoC உடனாக 8ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான வேப்பர் கூலிங் (VC) சேம்பரை கொண்ட லிக்விட் கூலிங் 2.0 தொழில்நுட்பத்தையும் பேக் செய்கிறது.

குறையே சொல்ல முடியாத கேமராக்கள்!

குறையே சொல்ல முடியாத கேமராக்கள்!

Redmi K50i 5G ஆனது 6P லென்ஸுடன் இணைக்கப்பட்ட 64 மெகாபிக்சல் Samsung ISOCELL GW1 மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது.

உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் f/2.45 அபெர்ச்சர் லென்ஸுடன் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உட்பொதிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி, பேட்டரி எல்லாம் எப்படி?

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி, பேட்டரி எல்லாம் எப்படி?

ரெட்மி K50i 5ஜி ஆனது 256GB வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் v5.3, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் -சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது.

பேட்டரியை பொறுத்தவரை 5,080mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இது தவிர்த்து டால்பி அட்மோஸ் உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீடு போன்றவைகளையும் வழங்குகிறது.

இந்தியாவில் Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் விலை:

இந்தியாவில் Redmi K50i 5G ஸ்மார்ட்போனின் விலை:

ரெட்மி கே50ஐ 4ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.25,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கும் வாங்க கிடைக்கும். இது Quick Silver, Phantom Blue மற்றும் Stealth Black என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும்.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள்:

விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள்:

இது வருகிற ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் Amazon, Mi.com, Mi Home stores, Croma மற்றும் பிற ரீடெயில் ஸ்டோர்ஸ் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ICICI பேங்க் கார்டு உரிமையாளர்களுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு EMI விருப்பங்களும் அணுக கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் மீது சுமார் ரூ.2500 என்கிற எக்ஸ்சேஞ்ச் போனஸும் உண்டு.

ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி சலுகைக்கு பதிலாக Mi ஸ்மார்ட் ஸ்பீக்கர்-ஐ பெறும் விருப்பம் அணுக கிடைக்கும்.

நினைவூட்டும் வண்னம், Redmi K50i 5G ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட" பதிப்பாகும்!

Photo Courtesy: Xiaomi

Best Mobiles in India

English summary
Comeback of Redmi K in India. Redmi K50i 5G Launched. Check Price, Full Specifications, Sale Date and Offers Details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X